Dulquer salman: நிஜ வாழ்க்கையிலும் நான் ரொமான்டிக் ஹீரோ தான்...நிரூபித்த துல்கர் சல்மான்!
இந்த வருடமும்தன் மனைவியின் பிறந்தநாளை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரின் புகைப்படங்களை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார், நடிகர் துல்கர் சல்மான்.
நடிகர் துல்கர் சல்மான் பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன். இவர் 2011 ஆம் ஆண்டு அமல் சூஃபியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மரியம் அமீரா சல்மான் என்ற 7 வயது பெண் குழந்தையும் உள்ளது. நேற்றைய தினம் துல்கரின் மனைவி அமல் சூஃபியாவிற்கு பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் தன் மனைவியின் பிறந்த நாளன்று நடிகர் துல்கர் சல்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு அழகிய குறிப்புகளுடன் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும்தன் மனைவியின் பிறந்தநாளை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரின் புகைப்படங்களை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
அந்த பிறந்தநாள் பகிர்வில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, என் அன்புள்ள ஆமிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இது நாம் இருவரும் இணைந்து கொண்டாடும் பண்ணிரண்டாவது பிறந்தநாள். நாட்கள் செல்வதே தெரியவில்லை… எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது.ஆனால் நீ இப்பவும் அப்படியே இளமையாகவே இருக்கிறாய். நான் எந்நேரமும் வேலை காரணமாக வெளியே இருக்கிறேன்.அச்சமயத்தில் குடும்பத்தின் தூணாக இருந்து தாங்குகிறாய். அதற்கு நன்றி! மேரிக்கு நான் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய நீ உடன் இருக்கிறாய். எங்கள் வாழ்வில் பல புதிய அத்தியாயங்களை தொடங்கியதற்கு மிக்க நன்றி. மேலும் என் உலகை அழகாக மாற்றிவிட்டாய். இந்த பிறந்தநாள் உனக்கு சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன். உனக்கு பிடித்த மாதிரி சிம்பிளாகவும் இனிமையாகவும் அன்பு நிறைந்த உன்னுடைய மக்களின் நடுவே!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் உயிரே… லவ் யூ! என்று தன் காதல் மனைவிக்கு அழகிய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான். சினிமாவில் மட்டுமில்லை நான் நிஜ வாழ்க்கையிலும் ரொமான்டிக் ஹீரோதான் என நிரூபித்து விட்டார் நடிகர் துல்கர் சல்மான்.
View this post on Instagram
சமீபத்தில் துல்கர் சல்மான், மிருனால் தாக்கூர் நடித்த சீதாராமம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் ஹிட் ஆகியுள்ளது. திரைப்படம் ஒரு போரூற்று எழுதிய காதல் கதை என்ற டேக் லைன் உடன் வெளியாகி அந்த கூற்றை நிறைவும் செய்தது. பல நாட்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு காதல் அத்தியாயம் தொடங்கியது போல் உள்ளது என பல தரப்பினரும் சீதாராமம் திரைப்படத்தை விமர்சித்து வந்தனர். இந்த திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.