DON Trailer: அமுக்கு டுமுக்கு அமால் டுமால்... வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டான்’ ட்ரெய்லர்
நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
சின்னத்துரையில் வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் எந்த பட அப்டேட் என்றாலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அனைத்து வயதினரையும் தனது ரசிகராய் கட்டிப்போட்டிருக்கும் சிவகார்த்திகேயனின் சமீபத்திய ஹிட் டாக்டர். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்துவருகிறார். லைகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில், டாக்டரில் சிவாவுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
Here we go, the trailer of our #DON - https://t.co/IHQ5QWQjMZ 🥳#DONfromMay13 #DONTrailer@Siva_Kartikeyan @KalaiArasu_ @Udhaystalin @LycaProductions @RedGiantMovies_ @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @SonyMusicSouth
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 6, 2022
இந்நிலையில் டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்:
Here is the first look of @Siva_Kartikeyan in & as #DON 🔥@Siva_Kartikeyan @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @bhaskaran_dop @Inagseditor @Udaya_UAart @VigneshShivN @anustylist @tuneyjohn @KalaiArasu_ @SKProdOffl @DoneChannel1 pic.twitter.com/bcb0sr4dLi
— Lyca Productions (@LycaProductions) November 10, 2021
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதனை அடுத்து, இப்படத்தின் ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ என்ற பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
படம் வரும் ஜனவரியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. பின்னர் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் டான் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. RRR படம் கடந்த மார்ச் 25ம் தேதி வெளியானதால் டான் படத்தை மே மாதம் 13ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியானது DON ட்ரைலர் - உங்கள் மதிப்பெண் என்ன? (0-10)https://t.co/wupaoCQKa2 | #DON #DonTrailer #DONfromMay13 @Siva_Kartikeyan pic.twitter.com/qbyov8lMRN
— ABP Nadu (@abpnadu) May 6, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்