Vela Rammoorthy: 'இந்தாம்மா ஏய்’ இனி இல்ல.. குணசேகரனை பூர்த்தி செய்தாரா 'இளந்தாரிப் பயல்களுக்கு’ க்ளாஸ் எடுத்த வேல ராமமூர்த்தி?
Vela Ramamoorthy: ஆதி குணசேகரனாக ரசிகர்களின் நெஞ்சங்களில் பென்ச்மார்க் செட் செய்துவிட்டார் நடிகர் மாரிமுத்து. அவரின் இடத்தை நிரப்புவாரா வேல ராமமூர்த்தி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன?
![Vela Rammoorthy: 'இந்தாம்மா ஏய்’ இனி இல்ல.. குணசேகரனை பூர்த்தி செய்தாரா 'இளந்தாரிப் பயல்களுக்கு’ க்ளாஸ் எடுத்த வேல ராமமூர்த்தி? Does Vela Ramamoorthy replaces the absence of Marimuthu as Adhi Gunasekran character in Ethirneechal serial Vela Rammoorthy: 'இந்தாம்மா ஏய்’ இனி இல்ல.. குணசேகரனை பூர்த்தி செய்தாரா 'இளந்தாரிப் பயல்களுக்கு’ க்ளாஸ் எடுத்த வேல ராமமூர்த்தி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/aa92283e193e05295f33aa882dc751531696512474008224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடில் புதிய குணசேகரனாக என்ட்ரி கொடுத்துள்ள எழுத்தாளரும் நடிகருமான வேல. ராமமூர்த்தி பற்றிய சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
வெளிப்படையான கிராமத்து மண் வாசனை கொண்ட வாட்டசாட்டமான ஒரு இரும்பு மனிதர் வேல ராமமூர்த்தி. தனது மண் சார்ந்த எழுத்துக்களால் ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் உள்ளிட்டவையை எழுதி கவனம் பெற்றவர். அவர் எழுதிய 'குற்றப்பரம்பரை' நாவல் விரைவில் வெப்சீரிஸாக வெளியாக உள்ளது. இந்த நாவலை வைத்து பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கு இடையில் பெரிய மோதலே நடந்துள்ளது!
இந்த கட்டமரக்காரர் ஐந்து ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மதயானைக்கூட்டம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் பின்னர் அப்பா, ரஜினி முருகன், சேதுபதி, அண்ணாத்த என ஏராளமான திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவரின் 'இளந்தாரிப்பய' என்ற வசனம் மிகவும் வைரலானது.
வசன உச்சரிப்பு, உடல் மொழி, கம்பீரமான தோற்றம், கர்ஜனையான குரல் இப்படி இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல இந்த அடையாளமான வசனங்களும் அவர்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான ஒற்றுமை எனலாம். இதுவரையில் வில்லனாகவே நாம் சினிமாவில் பார்த்து வந்த வேல ராமமூர்த்தி நடிக்கும் முதல் சீரியல் இதுதான். இதற்கு பிறகு அவர் வேறு சீரியல்களில் நடிப்பாரா என்பதும் கேள்விக்குறி தான். ஏன் என்றால் அவருக்கு சினிமாவில் நடிப்பதே பிரதானம் என கூறப்படுகிறது.
நடிகர் மாரிமுத்து, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி எதிர்நீச்சல் சீரியல் தொடங்கிய நாள் முதல் பதிந்து விட்டார். அவரின் இழப்புக்கு பிறகு காலத்தின் கட்டாயத்தால் அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக தொடர்ந்தாலும் நடிகர் மாரிமுத்துவின் இடத்தில் பொருத்தி பார்ப்பது என்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால் போக போக ரசிகர்களுக்கு வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக பழகி விடுவார்.
மாரிமுத்து ஒரு பென்ச்மார்க் செட் செய்துவிட்டார். அந்த இடத்தில் வேறு ஒருவரை பார்க்கும் போது அது வேறு மாதிரியாக தான் இருக்கிறது! ஒருவரை போலவே மற்றோருவரால் நடிக்க முடியாது என்றாலும் அவரவருக்கு என தனிச்சிறப்பு இருக்கும்.
வேல ராமமூர்த்திக்கு என தனி ஸ்டைல் உள்ளது. காலப்போக்கில் அவரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் ஒன்றி விடுவார். ஆனால் ரசிகர்கள் அவரை ஏற்று கொள்ள கொஞ்சம் கால அவகாசம் எடுத்து கொள்ளும். வேல ராமமூர்த்தி எந்த அளவிற்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பொருந்துகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)