‘காலங்கள் பல சென்றாலும் என் காதல் மறைவதில்லை..’ - கண் கலங்கும் பதிவை ஷேர் செய்த சேதுவின் மனைவி!
அவர்களின் திருமண நாளான பிப்ரவரி 12 ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கண் கலங்க வைக்கும் கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
கண்ணா லட்டு திண்ண ஆசையா புகழ், சேதுராமனின் மனைவி கண் கலங்க வைக்கும் பதிவை ஷேர் செய்துள்ளார்.
பாக்கியராஜின் சூப்பர் ஹிட் படமான “இன்று போய் நாளை வா” திரைக்கதையின் ரீமேக் என்று அறியப்படும் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஷிவாவாக நடித்தவர் சேது என்கிற சேதுராமன். சந்தானம், பவர் ஸ்டார், சேது ஆகிய மூன்று பேர் துறத்தி துறத்தி செளமியாவை காதலிக்க, எதிர்பாராத விதமாக ஷிவாவுக்கு மட்டும் பச்சை கொடி அசைத்து கதாநாயகி ஒகே சொல்வதனால், அப்படத்தில் சேது தனி கவனத்தை பெற்றார். தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் நடித்தார்.
சில படங்களில் மட்டும் நடித்து மக்களிடையே பரிட்சயமான முகமாக மாறிய சேது ஒரு தோல் மருத்துவர். 2020 ஆம் ஆண்டில், மாரடைப்பால் காலமானார் ஷிவா. இந்த செய்தியை கேட்ட பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
ஷிவாவின் இறப்பிற்கு பின்னர், அவரின் ஆசை மனைவியான உமா சேதுராமன் அவ்வப்போது அவரை பற்றி பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்.அந்தவகையில், அவர்களின் திருமண நாளான பிப்ரவரி 12 ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கண் கலங்க வைக்கும் கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
”7 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளை நான் திரும்ப பார்க்கையில், காலம் வேகமாக கடந்து செல்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது. ஆனால், காதல் உணர்வு மட்டும் மாறாமல் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நகர்ந்து செல்ல, அத்துடன் உங்களின் வாழ்வில் இணைந்த நாளும் அதிகரித்து கொண்டு போகிறது. உங்களுக்கு வயதே ஆகாது. வானத்தை தொடும் ஆசைக்கொண்ட நீங்கள், எப்போதும் ஆர்வம் மிக்க மருத்துவராகவே இருக்கிறீர்கள். உங்கள் மீதான என் காதல் அளவற்றது.
View this post on Instagram
இதுவரை, நம் திருமண நாளை கொண்டாடியதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உங்கள் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளேன். அந்த இனிய நினைவுகளை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். இதையே இனி வரும் காலத்தில் தொடர்ந்து செய்வேன். இது நமது 7 வது திருமண ஆண்டாகும்.” என்று உமா சேதுராமன் பதிவிட்டுள்ளார்.
உண்மையான காதல் என்றும் மறைவதில்லை என்ற கருத்தை நினைவுப்படுத்திய உமாவின் பதிவுக்கு பலரும் ஆதரவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.