"அப்படி வர்ற காசு தேவையா? எனக்கு கோவம் வருது" : பயில்வான் ரங்கநாதன் குறித்து பேசிய கலா மாஸ்டர்..
"எந்த படத்துல நடிச்சாங்கன்னு பேசுங்க, அவங்க சரியா ஷூட்டிங் போலயா, அதை பேசுங்க, ஆனா ஒருத்தர தனிப்பட்ட முறையில, அவங்க வாழ்க்கையை தப்பா பேசுறது ரொம்ப தப்பு"
80-கள், 90-களில், பின்னர் வடுவேலுவுடன் என சினிமாக்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள், வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்த பயில்வான் ரங்கநாதன், இன்று திரைப்படங்கள் இல்லாமல் இருக்கிறார். அதன் தாக்கத்தால் இவர்போன்ற பல நடிகர்கள் யூட்யூப் சானல் நடத்துவதை ட்ரெண்டாக வைத்துள்ளனர். இவர் பேசும் விஷயங்களாலேயே சர்சையாகி இவரது பெயர் சமீப காலமாக பெரிதாகி பேசப்படுகிறது.
பயில்வான் ரங்கநாதன்
இவர் தமிழ் சினிமா நடிகைகள் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து அடிக்கடி கவனம் பெற்று வருகிறார். இரவின் நிழல் திரைப்படத்தின்போது படு பிசியாக இருந்தார். திருவான்மியூர் பீச்சில் ஜாக்கிங் சென்று கொண்டிருந்த இவரை அந்த படத்தின் நாயகி ரேகாவிடம் அடி வாங்குவது வரை சென்றார். திரைப்படம், விமர்சனம் என்பதை தாண்டி தனிப்பட்ட முறையில் இவர் பேசுவது பலரை தூண்டுகிறது. இதேபோல் பாடகி சுசித்ராவும், பயில்வான் ரங்கநாதனை போனில் தொடர்புகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பிற்போக்குத்தனமான பேச்சு
பயில்வான் ரங்கநாதனின் பேச்சு பெரும்பாலும் பிற்போக்குத்தனத்தை ஊக்குவிப்பதாகவே இருப்பதாக திரைபிரபலங்களும், முற்போக்காளர்களும், பெண்ணியவாதிகளும் குற்றம்சாட்டுகின்றனர். யூடியூப் வீடியோக்கள் மட்டுமின்றி செய்தியாளர் சந்திப்புகளிலும் பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்களை சீண்டி பார்க்கிறார். சமீபத்தில் துல்கரை கேள்வி கேட்டு மடக்கப் பார்த்தார். ஆனால் துல்கர் அதனை சாமர்த்தியமாக கையாண்டார். ஒருமுறை இயக்குனர் கவுதம் வாசுதேவிடமும் அப்படி ஓரண்டை இழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் குறித்து பேசிய சர்ச்சை
ஒருமுறை ராதிகா சரத்குமார் குறித்து தவறாக பேசி அவரிடமே திட்டு வாங்கினார். தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதாக அறிவித்தபோது இவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஷ், ஐஸ்வர்யா, அனிருத் உள்ளிட்டோர் குறித்து, எல்லைமீறி முகம் சுளிக்கும் வகையில் மிக கீழ்த்தராமாக அவர் சில தகவல்களை பகிர்ந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் அப்போது எழுந்தன.
பெர்சனல் பேசக்கூடாது
விடியோவில் பேசும் கலா மாஸ்டர், "ஒரு நடிகரோ, நடிகையோ அவங்க என்ன பண்ணாங்க, எந்த படத்துல நடிச்சாங்கன்னு பேசுங்க, அவங்க சரியா ஷூட்டிங் போலயா, அதை பேசுங்க, ஆனா ஒருத்தர தனிப்பட்ட முறையில, அவங்க வாழ்க்கையை தப்பா பேசுறது ரொம்ப தப்பு. அவங்க பெர்சனல் விஷயத்தை பேசினா அவங்க எப்படி வாழுவாங்க. அது ரொம்ப இழிவு படுத்தும் அவங்கள. என்னை பொறுத்த வரையில் அதை செய்யவே கூடாது. ரொம்ப பெரிய தப்பு அது", என்று உணர்ச்சிமிக்க பேசினார்.
அந்த காசு நமக்கு தேவையா?
மேலும் பேசிய அவர், "இது அவங்கள மட்டும் காயப்படுத்தல, குடும்பத்தினர காயப்படுத்தும், அவங்க நண்பர்களை காயப்படுத்தும். அதனால உங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்குது. நான் பெர்சனலா யாரையும் ஹர்ட் பண்ண மாட்டேன். அதுமாதிரி யூட்யூப் வீடியோவையும் பார்க்கவும் மாட்டேன். ஏன்னா பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு, ரொம்ப கோவம் வருது… அதை ஏன் சார் பண்றீங்க, அது என்ன சார் தருது உங்களுக்கு. அதனால நெறய வியூஸ் வருதா… அந்த வியூஸால காசு வருதா… மத்தவங்க குடும்பத்தை கஷ்டப்படுத்தி வர்ற காச வச்சு என்ன சார் பண்ண போறீங்க?", என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்