Jasprit Bumrah Ruled Out: ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு... பும்ரா விலகலா?-காரணம் என்ன?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இம்முறை யுஏஇயில் நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இம்முறை யுஏஇயில் நடைபெற உள்ளது. இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடரின் அட்டவணை வெளியானது. இந்தச் சூழலில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Senior India fast bowler Jasprit Bumrah ruled out of Asia Cup due to back injury
— Press Trust of India (@PTI_News) August 8, 2022
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா,பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
The wait is finally over as the battle for Asian supremacy commences on 27th August with the all-important final on 11th September.
— Jay Shah (@JayShah) August 2, 2022
The 15th edition of the Asia Cup will serve as ideal preparation ahead of the ICC T20 World Cup. pic.twitter.com/QfTskWX6RD
15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணிடுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும்.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்