மேலும் அறிய

"என்னையும் வனிதாவையும் கம்பேர் பண்ணாதீங்க! நான் யாரையும்…" : கொதித்த ரவீந்திரன்!

வனிதா செய்ததும் நான் செய்வதும் ஒன்றல்ல என்றும் அதனை கம்பேர் செய்யாதீர்கள் என்றும் காட்டமாக விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன்.

தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை புகழ் மகாலட்சுமியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தை குறித்த டாக் இன்னும் சமூகவலைதளத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். சில திரைப்படங்களை விநியோகமும் செய்துள்ளார். 

ரவீந்திரன் - மகாலட்சுமி திருமணம்

மகாலட்சுமி  பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார். அதன் பின் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. உடல் பருமனாக இருக்கும் காரணத்தாலேயே இவர்கள் திருமணத்தை சமூக வலைத்தளங்களில் பலர் இழிவாக பேசி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் பல நேர்காணல்களில் தெறிக்கும் பதில்களை கூறி வருகிறார்.

வனிதா ட்விட்டர் பதிவு

இந்த நிலையில் நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மற்றவர்களின் வாழ்க்கை பற்றிப் பேச எனக்கு நேரம் இல்லை, நான் சந்தோஷமாகவும் பிஸியாகவும் இருக்கேன். ஆனால் அதே நேரத்தில் கர்மா மிகவும் மோசமானது, எப்போது எப்படி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது அதற்கு தெரியும். கர்மாவை நான் முழுவதுமாக நம்புகிறேன்" என்று விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: Watch video : அசந்து தூங்கும் குட்டியானை.. குடைபிடித்து பாதுகாக்கும் தமிழக வனத்துறையினர்.. இந்த க்யூட்டியை பாருங்க..

ரவீந்திரன் பதில்

இந்த கேள்வியை அவரிடம் கேட்க அதற்கு அவர் அதையும் இதையும் கம்பேர் பண்ணாதீங்க என்று குறிப்பிட்டார். அவர் பேசுகையில், "நான் யாருடைய கண்ணீருக்கு பின்னாலயும் கல்யாணம் பண்ணல. வனிதா, பீட்டர் பாலை திருமணம் செய்தபோது அவர் விவாகரத்து பெறவில்லை. எங்க திருமணத்தால யாரும் பாதிக்கப்படல. என்ன ட்ரோல் பண்றது வேற. வனிதாவ நான் கிழிச்சேன்னா, ஏன் கிழிச்சேன், அவங்க என்ன சீண்டுனாங்க. அவங்க திருமணத்தால அவருடைய மனைவி அழுதாங்க", என்று கூறினார். 

நான் யாரையும் அழ வைக்கல

மேலும் பேசிய அவர், "அவங்களுக்கு நியாயம் சொல்ல யாருமே இல்லையான்னு எல்லாம் கேட்டாங்க. அப்போ கூட நான் போய் அதுல தலையிடல. என்னை அவங்க பெர்சனலா சீண்டுனதுக்கு அப்புறம்தான் நான் பேசுனேன். நான் அப்போவும் அவங்க ஏன் கல்யாணம் பண்ணாங்க, இந்த கல்யாணம் தேவையா அப்படியெல்லாம் எதுவுமே பேசல. நான் அந்த பெண்ணுக்காக நியாயம் கேட்டேன் அவ்வளவுதான். அதுல என்னை அவங்க பாடி ஷேமிங் பண்ணாங்க, பெர்சனலா அட்டாக் பண்ணாங்க, திட்டினாங்க, ஆனா எனக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அப்படி பேசல. நான் அவங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்ணேன். அவங்கள கடைசி வரைக்கும் அக்கா அக்கான்னு தான் பேசுனேன். ஏன்னா நான் அவங்க ஃபேன். அந்த மரியாதையை கடைசி வரைக்கும் கொடுத்தேன். ஆனா என் விஷயம் அப்படி இல்ல. ப்ராப்பரா டைவர்ஸ் வாங்கி கல்யாணம் பண்ணிருக்கோம். யாரும் இதனால அழுதுட்டு இல்ல" என்று மூச்சு விடாமல் கூறி முடித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget