மேலும் அறிய

90s Vs 2K Diwali: இதுவா தீபாவளி? 90களில் கொஞ்சம் ஒப்பிட்டால் இத்தனை வித்தியாசமா?

90s Diwali: பண்டிகைகள் நம் மகிழ்ச்சிக்கானவை. ஆனால், அவை கூட இன்று சம்பிரதாயங்கள் ஆகிவிட்டன. சூழல் நம்மை மாற்றியிருக்கிறது. ஆனால், சூழலை மாற்றும் தன்மை நம்மிடம் இருக்கிறது

தீபாவளி என்றால் மகிழ்ச்சி, புத்தாடை, குதூகலம் என்பது மாறி, போனஸ், ரிலீஸ் மூவி, மது பார்ட்டி என மாறிவிட்டது. அவதாரங்களால் உருவான தீபாவளி பண்டிகையே இன்று பல அவதாரங்களை எடுத்துவிட்டது. ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு அவதாரம் எடுக்கிறது தீபாவளி. தீபாவளி அப்படியே தான் இருக்கிறது; நாம் தான் அதை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். 90களுக்குப் பின்பே தீபாவளி புதுவடிவம் பெறத் தொடங்கிவிட்டது. அப்படி என்ன தான் மாற்றம் கண்டுள்ளது தீபாவளி? வாங்க... 90களில் இருந்த தீபாவளியையும், இப்போதுள்ள தீபாவளியையும் கொஞ்சம் ஒப்பிடலாம் ஜாலியாக...

அப்பாவின் பணி...!

90களில்: அதிகாலை 4 மணிக்கெல்லாம் அப்பா தெருவோர மட்டன் கடையின் வரிசையில் நிற்பார். முன்னதாக வீட்டில் இருந்து புறப்படும் போதே, ‛ஏய்.. சீக்கிரம் தூக்க தூக்கிட்டு வா... காலகாலத்துல போய் வாங்கிட்டு வந்தா தான்... புள்ளைங்களுக்கு சீக்கிரம் சமச்சு தர முடியும்...’ என நெளிந்து போன சில்வர் தூக்குவாளியோடு, தலையில் துண்டைக்கட்டிக்கொண்டு புறப்படுவார் தந்தை. அவருக்கு முன்பே, இன்னும் பல தந்தைகள் முன்கூட்டியே வந்து மட்டன் கடையில் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். அவர் முறை வரும் வரை காத்திருந்து, கடைக்காரரை நெருங்கியதும், ‛இளம் கறியா போடுங்க... புள்ளைங்க திங்க முடியாது...’ என்பார் அப்பா. இறைச்சிக்கடைக்காரர் வெட்டிக்கொண்டிருக்கும் போதே, ‛கொழுப்புகளை போடாதீங்க... எழும்பை போடாதீங்க...’ என கண்ணும் கருத்துமாக கறிவை வாங்குவார். வாழை இலையில் மடித்து தரப்படும் இறைச்சியை, அப்படியே தூக்கு வாளியில் போட்டுக் கொண்டு, இரண்டு ஆட்டு ரத்தத்தையும் தனியாக வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அப்பா வரும் போது, பளபளவென விடிந்திருக்கும். வந்த கையோடு, மனைவியிடம் கொடுத்து, ‛இந்த... இளம் குட்டி தான் ரொம்ப வேக வெச்சிடாத...’ என கொடுப்பார். அத்தோடு, ‛இந்த... ஆட்டு ரத்தம் வாங்கியாந்தேன்... புள்ளைகளுக்கு முதல்ல பொரிச்சு கொடு...’ என , உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளை குளிக்க வைக்க புறப்படுவார். 


90s Vs 2K Diwali: இதுவா தீபாவளி? 90களில் கொஞ்சம் ஒப்பிட்டால் இத்தனை வித்தியாசமா?

இன்றைய தந்தை: காலை 6 மணிக்கு நன்கு உறங்கிக் கொண்டிருப்பார். மனைவி வந்து அவரை எழுப்புவார். ‛இன்னைக்காவது தூங்கவிடக்கூடாதா... என் இப்படி டார்ச்சர் பண்ற...’ . ‛பசங்க ரெடியாகிட்டாங்க... சீக்கிரம் வாங்க... பட்டாசு வெடிக்கணுமாம்...’ என மனைவி கூற, ‛இதான் உங்களுக்கு வேலை...’ என எரிச்சலோடு எழுந்து கையில் ப்ரெஸ் உடன் பல் துலக்க தொடங்கிவிடுவார். ஒருபுறம் பல் துலக்கும் போதே மற்றொரு புறம் கையில் மொபைல் போனை எடுத்துக் கொண்டு, ‛ஏய்... மட்டனா... சிக்கனா...’ என மனைவியிடம் கேட்டார். ‛மட்டன்... ’ என மனைவியிடம் பதில் வரும். ‛எத்தனை கிலோ...’ என தந்தை கேட்டார். ‛ம்... ஒரு ஒன்றரை கிலோ போடுங்க...’ என்பார் மனைவி. மொபைல் போனில் உள்ள ஆன்லைன் மீட் டெலிவெளி அப்ளிகேஷனை திறந்து , எதில் ஆஃபர் இருக்கு என பார்த்து, அதில் இறைச்சியை புக் பண்ணிவிட்டு, குளிக்கப் புறபடுவார் தந்தை. அவர் குளித்து வரும் போது, ஆர்டர் வந்திருக்கும். 

குடும்பத் தலைவியின் பணி!

90களில்: கணவர் 4 மணிக்கு கறி வாங்க புறப்படுவார் என்பதால், அதற்கு முன் அவருக்கு காபி, டீ போட்டுத்தர வேண்டும். முதல் நாள் இரவு 12 மணிக்கு தொடங்கி முறுக்கு, அதிரசம் சுடும் பணி, 5 மணி நேரத்தை கடந்து சென்று கொண்டிருக்கும். விறகு கட்டைகளை அடுப்புகளுக்குள் தள்ளிக் கொண்டே, அதிலிருந்து வரும் புகையை பருகிக் கொண்டே வியர்வையும், இருமலுமாக மாவுகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பார் தாய். கணவர் எழுந்து கறி வாங்க கிளம்பிக்கொண்டிருக்கும் போது, பலகார பணிகளுக்கு இடையே, அவருக்கு தேனீர் கொடுத்து, தெம்பாக வழியணுப்புவார். கணவர் கறியோடு வீடு திரும்புவதற்குள் அதை சமைப்பதற்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டிருப்பார். ‛இந்த கருவேப்பில்லை இங்கே தானே இருந்துச்சு... சீரகம் இருக்கு பட்டை இலையை காணாமே...’ என தனியாக புலம்பிக் கொண்டிருப்பார். இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, குழந்தைகள் குளிக்க, எண்ணெய், சீயக்காய் உள்ளிட்டவற்றையும் ரெடி செய்திருப்பார். மற்றொருபுறம் அனைவரும் குளிக்க சுடுதண்ணீர் வேற தயாராகிக்கொண்டிருக்கும். கணவர் கறியோடு வந்து, மெனுக்களை அடுக்கிக் கொண்டிருப்பார். ‛சரிங்க.. இந்தாங்க துண்டு... நீங்க போய் குளிச்சிட்டு வாங்க... அதுக்குள்ள கறியில் சூப்பு எடுத்து வைக்கிறேன்...’ என அவரை அனுப்பிவிட்டு, அவர் கூறாத ஒரு மெனுவையும் தயார் செய்ய புறப்படுவார் மனைவி. 


90s Vs 2K Diwali: இதுவா தீபாவளி? 90களில் கொஞ்சம் ஒப்பிட்டால் இத்தனை வித்தியாசமா?

இன்றைய குடும்பத்தலைவி: காலை 6 மணியாகியும் கணவர் தூங்கிக் கொண்டிருக்க, அம்மாவிற்கு போன் செய்கிறார். ‛அம்மா அவர் இன்னும் தூங்கிட்டு இருக்காரு... பாவம் அவருக்கும் டயர்ட்டா இருக்கும்ல.. எனக்கும் ஒரு மாதிரி டயர்ட்டா தான் இருக்கு.. காலையில் மினி டிப்பன் ஆர்டர் பண்ணப்போறேன்... அவர் எழுந்து மீட் ஆர்டர் பண்ணிப்பாரு... பசங்க பட்டாசு வெடிக்கிற குஷியில குளிச்சு ரெடியாகிட்டாங்க... அவர் எழுந்ததும் குளிச்சிட்டு பட்டாசு போட வேண்டியது தான். எனக்கு இந்த சேலை எப்படி கட்டுறதுனு தெரியல.. யூடியூப் பார்த்து தான் கட்டனும். சரிம்மா... எனக்கு நிறைய வேலை(?) இருக்கு... அப்புறம் பேசுறேன்...’ என அம்மாவிடம் பேசிவிட்டு போனை ‛கட்’ செய்துவிடுவார். பின்னர் கணவரிடம் செல்வார், ‛ஏங்க... சீக்கிரம் எந்திருங்க... நீங்க கறி புக் பண்ணா தான், சீக்கிரம் சமைக்க முடியும்... மதியம் 2:30 ஷோ போகணும்ல..’ என அன்பு கோரிக்கை வைத்து அவரை எழுப்புவார். ‛ஏங்க... அதோடு ஒரு கிலோ ஸ்வீட் புக் பண்ணிடுங்க... சாமி கும்பிட வேணும்...’ என ,கூடுதல் கோரிக்கை வேறு. 

குழந்தைகள் மனநிலை!

90களில்: விடிந்தால் தீபாவளி, வாங்கி வைத்த பட்டாசுகளை நினைத்தே, இரவு தூக்கம் வராது. போதாக்குறைக்கு புத்தாடை வேறு. அந்த ஆடையை உடுத்திவிட்டு, மறுநாள் பள்ளிக்கு அதை உடுத்தி செல்ல வேண்டும் என்கிற உற்சாகம் வேறு மனதில் குளுகுளுவேன ஓடிக்கொண்டிருக்கும். இதோ அதோ என... உரக்கத்தை வரவழைக்க படாது பாடு பட்டுக்கொண்டிருப்பார்கள். இதற்கிடையில் அம்மா சுட்டுக்கொண்டிருக்கும் முறுக்கு, அதிரசத்தின் வாசம் வந்து சேர, படுக்கையில் இருந்து எழுந்து ஓடி, சுடச்சுட எண்ணெய் கூட வடியாத அந்த பதார்த்தங்களை வாங்கி எதார்த்தமாக வாயில் போட்டுக் கொள்வதும், ‛இனிப்பு... காரம் ....’ இருக்கா என அம்மா கேட்க, ‛ம்... நல்லா இருக்கு...’ என கூறிவிட்டு, படுக்கையில் வந்து ஒருவழியாக உறங்கிவிடுவார்கள். கடைக்கு போய் வந்த அப்பா, அருகில் வந்து எழுப்பும் போது எழாத அவர்கள், பக்கத்து வீட்டு பட்டாசு வெடித்ததும், வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து கொண்டு, வேகமாக வெளியே வந்து, யாரெல்லாம் பட்டாசு வெடிக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, வேக வேகமாக ஓடிப் போய் குளித்துவிட்டு, சாமியை கும்பிட்டும், கும்பிடாமலும் ஒரு 100 வாலா சரத்தோடு ரோட்டுக்குச் சென்று, படபடவென ஒரு வெடியை வெடிக்க வைத்துவிட்டு, அன்றைய வெடிக்கணக்கை தொடங்கிய பிறகு தான் அவர்களுக்கு நிம்மதியே வரும். பொதிகை தொலைக்காட்சியில் பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருக்க, அம்மா தந்த முறுக்கு, அதிரசத்தை சுவைத்த படி அப்பா அதை பார்த்துக் கொண்டிருக்க, பட்டாசுகளோடு குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு அப்பாவை தொந்தரவு செய்வதே முழு நேர வேலையாக இருக்கும். இடையில்  அப்பா தட்டில் இருக்கும் முறுக்கில் கை வைக்க வரும் போது, ‛கையெல்லாம் வெடி மருந்து... கையை கழுவிட்டு சாப்பிடு என...’ எங்கோ இருந்து கொண்டு, நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் தாய் போடும் சத்தம், அத்தனை வெடியையும் கடந்து சத்தமாய் கேட்கும். இடையில் மழை பெய்து வெடி போட தடை வரும் போது, மழையை கடிந்து கொண்டே, சிலர் அழுவதும், அவர்களை ஆறுதல் செய்து வீட்டில் இருந்து வெடிக்கும் தந்திரத்தை தந்தை சொல்லித்தருவதும், மறக்கமுடியாத 90களின் அனுபவம்!


90s Vs 2K Diwali: இதுவா தீபாவளி? 90களில் கொஞ்சம் ஒப்பிட்டால் இத்தனை வித்தியாசமா?

இன்றைய குழந்தைகள்: காலையில் வழக்கமான அதே டிபன்; சில நேரங்களில் அது ஆர்டர் செய்த மினி டிபனாகவும் இருக்கும். பெயருக்கு அதை ஒரு வாய் வைத்துவிட்டு, பட்டாசுகளை எடுத்துக் கொண்டு, புத்தாடைகளை உடுத்துக் கொண்டு தெருவுக்கு வந்தால், அந்த சின்ன சாலையில், ஏற்கனவே இடம்பிடித்திருக்கும் பெரும் கூட்டம். எங்கு வெடி வைப்பது என்கிற இடப்பிரச்னை. சரி மாடியில் இருந்து தூக்கி வீசலாம் என்றால், கீழே நிற்பவர்கள் தலையில் வெடித்து விடும். அவங்க போனதும் வெடிக்கலாம் என காத்திருந்தால், அதே போல தக்கலில் காத்திருப்போர், அடுத்தடுத்து ஆக்கிரமித்துக் கொண்டே இருப்பார்கள். சரி, இது சரிவராது என 10 மாடியின் உச்சிக்கு சென்று வெடிக்கப் போனால், அங்கு வெடிக்கும் சத்தத்தில் எந்த உற்சாகமும் கிடைக்காது. அதற்குள் காலை 10 மணியாகிவிடும். குக் வித் கோமாளிகள் கொண்டாடும் தீபாவளி நிகழ்ச்சி நினைவுக்கு வந்துவிடும். டிவி முன் அமர்ந்தால், அரை நாள் போய்விடும். அம்மாவின் ‛நான் வெஜ்’ சமையம் ரெடியாகி , அடுப்பை விட்டு இறக்கியும் இறக்காமல், ‛சீக்கிரம் சாப்பிடுங்க... சீக்கிரம் சாப்பிடுங்க’ என தியேட்டருக்கு கிளம்பும் அவசரத்தில், அரை குறையாக சாப்பிட்டு விட்டு, தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று புத்தம் புதிய துணியை கசக்கி கந்தையாக்கிவிட்டு, மாலையில் வீடு திரும்பினால், மத்தாப்பு எடுக்க மனசு தூண்டும். எடுத்துக்கொண்டு நான்காவது மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள், அனைத்து அப்பார்ட்மென்ட் வாசிகளும் இடம்பிடித்திருப்பார்கள். காலையைப் போலவே காத்திருந்து, காத்திருந்து காலம் போகும்!

 (இப்படி தான் இன்று பெரும்பாலானோர் தீபாவளியை கடக்கிறார்கள்; சிலர் இதற்கு விதிவிலக்கு. கிராமங்களில் கூட தீபாவளி நடைமுறை மாறிவிட்டது. பண்டிகைகள் நம் மகிழ்ச்சிக்கானவை. ஆனால், அவை கூட இன்று சம்பிரதாயங்கள் ஆகிவிட்டன. சூழல் நம்மை மாற்றியிருக்கிறது. ஆனால், சூழலை மாற்றும் தன்மை நம்மிடம் இருக்கிறது; மாற்ற முயற்சியுங்கள்... மகிழ்வோடு தீபாவளியை கொண்டாடுங்கள்... எதை மிஸ் செய்தீர்கள் என உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்... அவர்கள் 90களுக்கு முந்தைய தீபாவளியை கொண்டாடியவர்கள்... உண்மையான பண்டிகை வைப் என்னவென்று அவர்களை விட தெரிந்தவர்கள் வேறு யார் இருக்கப் போகிறார்கள்?)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Embed widget