Divya Sathyaraj : அழகான உடை அவசியமில்லை; அன்பான இதயம் தான் முக்கியம் - திவ்யா சத்யராஜ் லேட்டஸ்ட் போஸ்ட்
Divya Sathyaraj : நான் உடுத்தும் உடைக்காக நான் அறியப்பட வேண்டியதில்லை, என் வேலைக்காக நான் அறியப்படவே விரும்புகிறேன் - திவ்யா சத்யராஜ்
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜ் மகளுமான திவ்யா சத்யராஜ் 'மகிழ்மதி இயக்கம்' என்ற பெயரில் அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா காலகட்டத்தில் துவங்கினார். தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சத்தான உணவை இலவசமாக வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த அமைப்பின் மூலம் தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.
உணவும், ஊட்டச்சத்தும் வசதி படைத்தவர்ககளுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்ற நியாயமில்லாத எண்ணத்தை முறியடிக்கும் வகையில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து தர கூடிய உணவுகளை வழங்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு பல நல திட்டங்களை வழங்க வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கனவாக கொண்டவர் திவ்யா சத்யராஜ்.
கடந்த 2020ம் ஆண்டு இந்த மகிழ்மதி இயக்கம் துவங்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு நல்ல ஒரு தமிழ் பெயரை வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட திவ்யா சத்யராஜ் தனது தாயின் பெயரில் இருந்து மஹியையும் தன்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படமும் அவருடைய அப்பா நடித்த 'பாகுபலி' படத்தில் இருந்து 'மகிழ்மதி' என்ற பெயரை தேர்ந்து எடுத்து அந்த இயக்கத்திற்கு 'மகிழ்மதி இயக்கம்' என பெயர் சூட்டினார். இது குறித்து அவர் கூறுகையில் இந்த இயக்கம் மூலம் இதயத்தின் ஒரு பகுதியாக விளங்கும் என்னுடைய தந்தைக்கும் தாய்க்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன் என தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்த அமைப்பானது தமிழ்நாட்டையும் தாண்டி மணிப்பூர் மற்றும் இலங்கையில் உள்ள அரசு சார்பற்ற அமைப்புகளுடன் கூட்டணி சேர்ந்து அங்கு தொண்டு செய்ய துவங்கியுள்ளது. அந்த வகையில் இலங்கையில் Serendip.bethechangefoundation என்ற அமைப்புடன் கூட்டணி சேர்ந்து இலங்கையில் உள்ள தமிழ் பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு நிதி திரட்டும் விழா ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த விழாவிற்கு அவர் தயாராவதை பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார் திவ்யா சத்யராஜ்.
"இந்த விழாவிற்கு என்ன உடை அணிந்து செல்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் நான் உடுத்தும் உடைக்காக நான் அறியப்பட வேண்டியதில்லை, என் வேலைக்காக நான் அறியப்படவே விரும்புகிறேன்... அதானல் அதற்காக நான் சிரமப்பட தேவையில்லை என்பதை உணர்ந்தேன். ஒரு இடத்தில் நான் அழகான உடை அணிந்தவளாக தோன்றுவதை காட்டிலும் ஒரு அன்பானவளாக தோன்றவே ஆசைப்பட்டேன். அழகான முகத்தை காட்டிலும் அழகான இதயம் தான் மிகவும் முக்கியம்" என குறிப்பு ஒன்றை பகிர்ந்து இருந்தார் திவ்யா சத்யராஜ்.