Disney-Pixar’s Lightyear: சர்ச்சைக்குரிய முத்தக்காட்சி: சவுதியில் டிஸ்னியின் பிரபல திரைப்படத்திற்கு தடை
டிஸ்னி வெளியிட இருக்கும் திரைப்படத்திற்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவத்தின் படமான Lightyear சவுதி அரேபியா நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The Hollywood Reporter என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தில் Lightyear திரைப்படத்தில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் முத்தமிடும் காட்சி இடம்பெற்றுள்ள காரணத்தால் சவுதி நாட்டில் அப்படத்தை வெளியிட தடை விதித்திருப்பதாக கூறியுள்ளது.
Eternals மற்றும் Doctor Strange in the Multiverse of Madness, உள்ளிட்ட திரைப்படங்களும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The Media Regulatory Office announced that the animated film Lightyear, which is scheduled for release on 16th June, is not licensed for public screening in all cinemas in the UAE, due to its violation of the country’s media content standards. pic.twitter.com/f3iYwXqs1D
— مكتب تنظيم الإعلام (@uaemro) June 13, 2022
கதார், குவைத் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த படங்களை திரையிட தடை விதிக்கப்பட்டது. இந்த படத்தில் Hawthorne (Uzo Aduba) அவருடைய துணைக்கு முத்தமிடும் காட்சி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்பாலின ஈர்ப்பு குறித்த காட்சி இடம்பெற்றதால் தடை செய்வது நியாயம் இல்லை என்று பலரிடையே கருத்து நிகழ்வுகிறது.
Buzz lightyear டிஸ்னி உருவாக்கிய டாய் ஸ்டோரி (Toy Story) படத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரம் ஆகும். நான்கு பாகங்களாக டாய் ஸ்டோரி வெளிவந்தது. 1995 -இல் வெளியான டாய் ஸ்டோரி முதல் பாகத்தில் lightyear நடித்திருந்தார்.
டிரெய்லரை காண:
வளைக்குடா நாடுகளில் தமிழ் திரைப்படமான பீஸ்ட் படம் வெளியிட தடை வித்தித்திருந்தது. குவைத் நாட்டில் அந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள், வெளியுறவு கொள்கைக்கு மற்றும் அண்டை நாடுகளுடன் நல்லுறவுக்கு எதிரான படங்கள், குறிப்பாக வளைகுடா நாடுகளில் வில்லன்கள் இருப்பது, தீய செயல்களை வளைகுடா நாடுகளில் செய்வது போன்ற காட்சிகள் இருந்தால் குவைத் நாட்டில் அந்த படம் தடை செய்யப்படும் என்பது வழக்கமாக உள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒரு திரைப்படம் வெளியிட வேண்டும் என்றால், அது அந்நாடு வரையறுத்திருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இல்லையெனில், எந்த திரைப்படமும் வெளியிட அனுமதி பெற முடியாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்