‛தனுஷ்தான் நயன்தாராவை சந்திக்க வைத்தார்... ஆட்டோவில் போய் ஓகே செய்தேன்...’ -விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்!
‛‛நயன்தாராவிடம் கதை சொல்லும் போது, கவுதம் கார்த்திக் தான் ஹீரோ. அதற்கு நயன்தாரா ஓகே சொல்லிட்டார்...’’
ஒரு வழியாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ,தம்பதியாக மாறப்போகிறது. திருமணத்திற்கு இன்று தயாரானாலும், நீண்ட நாட்களா... இல்லை, இல்லை, ஆண்டுகளாக காதல் ஜோடியாக வலம் வந்த இவர்கள், சேர்ந்தது எப்படி என்கிற கேள்வி பலரிடம் இருந்தது. அது, விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இதோ, அதை கேளுங்கள்...
‛‛தனுஷ் சார் ஒருநாள் என்னிடம், ‛நயன்தாராவிடம் கதை சொல்றீயா...’ எனக் கேட்டார். ‛ஓகே சார்... சொல்றேன் சார்...’ என , நானும் கூறினேன். சொல்லமாட்டோமானா சொல்லப்போறோம். ‛தாராளமா சொல்லலாம் சார்... அவங்கெல்லம் நம்ம கதை கேட்பாங்களா சார்.. கதை பிடிக்குமானு...’ சொன்னேன். அவரே நயன்தாராவிடம் பேசி, ‛இந்த கதையை ஒரு முறை கேளு...’ என, தனுஷ் சிபாரிசு செய்தார்.
என்னோட கோ-டைரக்டர் செந்திலுடன் நயன்தாராவை சந்திக்க புறப்பட்டேன். ஆட்டோவில் தாஜ் ஓட்டலுக்கு புறப்பட்டோம். அப்போ செந்திலிடம் கூறினேன், ‛செந்தில்... நயன்தாராவுக்கு கதை பிடிக்குமோ... பிடிக்காதோ தெரியாது... ஆனால், நயன்தாரா பக்கத்துல இரண்டு, இரண்டரை மணி நேரம் உட்கார நமக்கு நேரம் கிடைக்கும். பக்கத்துல இருந்து பார்க்க முடியும்; கதை சொல்ல முடியும்’ என செந்திலிடம் கூறினேன். கதையை சுருக்கமா சொல்லுவோம்... அவங்க ரசித்தால், நீட்டிப்போம் என்கிற ஐடியாவில் தான் போனோம்.
நயன்தாராவை பார்த்து கதை சொல்ல ஆரம்பித்தோம். எனக்கு ஒரு ஐடியா இருந்தது. என் கதையில் அந்த முதல் இரு இடத்தில் சிரித்து விட்டார்கள் என்றால், அந்த கதை அவங்களுக்கு புரியுது என்று அர்த்தம். சிரிக்கவில்லை என்றால், கதை அவங்களுக்கு புரியவில்லை என்று அர்த்தம். அதுக்கு அப்புறம் யாரிடம் கதையை சொல்லி, அவங்களை கொடுமைக்கு ஆளாக்க கூடாது என்பது என்னோட பாலிசி.
நயன்தாரா, முதல் சீன் கேட்டதுமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு நிறைய நம்பிக்கையாகிவிட்டது. நான் இதற்கு முன் யாரிடமும் இந்த ரெஸ்பான்ஸ் பெறவில்லை. நானும் ரவுடி தான் கதையை நான் பலரிடம் கூறிய போது, அவர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரி இருந்தது. ‛என்ன விக்கி... சூப்பரா இருக்கு கதை...’ அப்படிங்கிற அளவிற்கு நயன்தாரா மாறிட்டாங்க.
எனக்கே ஆச்சரியம்... ரொம்ப அறிவாளியா இருக்குதே இந்த பொண்ணு என, நானே ஷாக் ஆகிட்டேன். இரண்டு வில்லன்கள் சண்டை போடுறாங்க, நடுவுல ஹீரோ நிற்பாரு, அவங்களே குத்திட்டு செத்துடுவாங்கனு நான் சொன்னதை வேறு எந்த ஹீரோவும் கேட்க மாட்டாங்க. விஜய் சேதுபதி கேட்டாரு. விஜய் சேதுபதி எப்போதுமே அதை செய்யமாட்டேன், இதை செய்யமாட்டேன் என சொல்லமாட்டார்; கதைக்குள் வரமாட்டார்.
நயன்தாராவிடம் கதை சொல்லும் போது, கவுதம் கார்த்திக் தான் ஹீரோ. அதற்கு நயன்தாரா ஓகே சொல்லிட்டார். அப்புறம் புது முகம் போடுவதாக இருந்தது. நயன்தாராவிடம் போய் கூறினேன், ‛மேடம், கவுதம் கார்த்திக் இல்லை... வேறு ஒருவரை பார்க்கிறோம்’ என்று; ‛ஒன்னும் பிரச்சனை இல்லை... யாரை வேணும்னாலும் போடுங்க... என் கேரக்டர் எனக்கு பிடிச்சிருக்கு... நான் ரெடியா தான் இருக்கேன்...’ என்றுகூறினார். அப்புறம் போய், விஜய் சேதுபதியிடம் கேட்டேன், அவர் ஓகே சொல்லிட்டார்.
கொடைக்கானலில் சீனுராமசாமி ஷீட்டிங் நடந்து கொண்டிருந்தது. பையில் 300 ரூபாய் இருந்தது. இரவோடு இரவாக பஸ் ஏறி, கொடைக்கானல் போனேன். அவரைப் பார்த்து, ‛சார்... இந்த படத்தை பண்ணிக் கொடுங்க சார்...’ என்று கூறினேன். ‛டேய்... இதுக்கு ஏன்டா... இவ்வளவு தூரம் வந்த’ எனக்கேட்டார். அப்புறம் சூட்டிங் முடிச்சிட்டு, இரவு அவர் ரூமில் சாப்பிட்டோம். அப்போது தான், ‛சரிடா.. நான் பண்றேன்...’ என ஓகே சொன்னார் விஜய் சேதுபதி!’’ என்று டூரிங் டாக்கீஸ் என்கிற இணையதளத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.