4 நொடிகளில் 100 கிமீ வேகம்..இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் மின்சார கார் வாங்கிய நயன்தாரா
நடிகை நயன்தாராவின் 41 ஆவது பிறந்தநாளுக்கு அவருக்கு புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் கணவர் விக்னேஷ் சிவன்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நேற்று நவம்பர் 18 ஆம் தேதி தனது 41 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் கணவர் விக்னேஷ் ஷிவன். இந்த காரின் விலை ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த காரை இந்தியாவில் முதல் முறையாக சொந்தமாக்கிய நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத் தக்கது
41 வயதை எட்டிய நயன்தாரா
2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை நயன்தாரா. தமிழில் ரஜினி , விஜய், அஜித் , சூர்யா , இந்தியில் ஷாருக் கான் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சொந்தமாக காஸ்மெடிக் நிறுவனம் , தயாரிப்பு நிறுவனம் என நயன்தாராவின் சினிமா சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்தது. தற்போது மலையாளத்தில் மம்மூட்டி மோகன்லால் , தெலுங்கில் சிரஞ்சீவி , பாலையா போன்ற சூப்பர்ஸ்டார்களுடன் நடித்து வருகிறார். நேற்று நவம்பர் 14 ஆம் தேதி நயன் தனது 41 ஆவது வயதை எட்டினார். தனது பிறந்தநாளை தனது கணவன் மற்றும் இரு மகன்களுடன் அவர் மகிழ்ச்சியாக கொண்டாடினார். நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசாக கணவர் விக்னேஷ் ஷிவன் புத்தம் புதிய Rolls Royce லேட்டஸ் மாடன் காரை பரிசளித்துள்ளார்.
நயன்தாராவின் புதிய கார் விபரங்கள்

நயன்தாராவிடம் ஏற்கனவே சில விலையுயர்ந்த சொகுசு கார்கள் உள்ளன. ஆனால் இந்த முறை அவர் வாங்கியுள்ள புதிய காருக்கு பல தனித்துவங்கள் இருக்கின்றன. Rolls royce நிறுவனத்தின் முதல் முழு மின்சார கார் Rolls Royce Spectre Black Badge காரை தான் நயன்தாரா வாங்கியுள்ளார். இந்த காரின் விலை கிட்டதட்ட ரூ 10 கோடியாகும். கடந்த ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் தங்களது முதல் மின்சார காரை இந்த அறிமுகப்படுத்தியது . ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்த கார்களில் மிகச் சிறந்த காராக இது கருதப்படுகிறது. வெறும் 4.1 நொடிகளில் இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 490 முதல் 530 கிலோமீட்ட தொலைவு இந்த கார் செல்லக்கூடியது. இந்தியாவில் இந்த காரை முதல் முறையாக சொந்தமாக்கிய பெருமை நயன்தாராவை சேரும்.





















