Thalapathy Vijay: விஜய்யின் The Greatest Of All Time படம் ஹாலிவுட் பட ரீமேக்கா? - பதிலடி கொடுத்த வெங்கட்பிரபு
ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பாக உள்ள விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி ஒருவழியாக “தளபதி 68” படத்தின் மூலம் இணைந்துள்ளது.
தளபதி விஜய் நடிக்கும் 68வது படத்திற்கு The Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு அதீத கவனத்தை பெற்றுள்ளது.
ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பாக உள்ள விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி ஒருவழியாக “தளபதி 68” படத்தின் மூலம் இணைந்துள்ளது. பிகில் படத்துக்கு பிறகு விஜய்யின் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா என பலர் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதல் அப்டேட்டாக படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. அதன்படி இந்த படத்துக்கு The Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அந்த போஸ்டரில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் இருக்கும் போட்டோவும் இடம் பெற்றுள்ளது. இது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இதனிடையே இணையவாசி ஒருவர், இயக்குநர் வெங்கட் பிரபுவை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “2023 ஆம் ஆண்டில் வாரிசு, லியோ படத்தின் தோல்வியால் 2024ல் நல்ல ரீ எண்ட்ரீயை விஜய் எதிர்பார்க்கிறார். எனவே நீங்கள் உண்மையில் ஏதேனும் ஹாலிவுட் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு அவர் பொருத்தமானவர் அல்ல என்று நான் நினைக்கிறேன். காரணம் விஜய் ஒன்றும் அஜித்குமாரோ, மகேஷ் பாபுவோ இல்லை.
விஜய் படங்களை பார்க்கும்போது சில நல்ல தெலுங்கு ரீமேக்குகளால் மட்டுமே அவர் இந்தத் துறையில் நிலைத்திருக்கிறார். எனவே ஒரு நல்ல தெலுங்கு படத்தை வாங்கி அதை ரீமேக் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆலோசனை. நீங்கள் ஹாலிவுட் ரீமேக் தான் செய்யப்போகிறீர்கள் என்றால் பாதி சுடப்பட்ட ஹாலிவுட் ரீமேக்காக மாறிய அவர்களின் முந்தைய வெளியீடான லியோவை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள வெங்கட் பிரபு, “மன்னிச்சுகோங்க சகோதரரே, நான் உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள். அன்பை பகிரவும்” என கூறியுள்ளார். ஆக மொத்தம் The Greatest Of All Time என்ன மாதிரியான படம் என்ன எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேசமயம் The Greatest Of All Time படத்தின் போஸ்டர் வில் ஸ்மித் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி மேன் படத்தின் போஸ்டரை போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.