(Source: ECI | ABP NEWS)
சிவகார்த்திகேயனுடன் அடுத்த படம்.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?.. வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

பராசக்தி படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தை விஜய், அஜித் படங்களை இயக்கிய இயக்குநர் இயக்க இருப்பது உறுதியாகியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கும் தேதியையும் அந்த இயக்குநரே அறிவித்திருக்கிறார். தற்பாது சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி படங்களை கைவசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் நாயகன்
கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் 350 கோடியை தாண்டி வசூலை ஈட்டிய படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. சிவகார்த்திகேயன் சினிமா கரியரில் அமரன் முக்கிய படமாக இருக்கிறது. ராணுவ அதிகாரி முகுந்தனின் பயோபிக் படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பும் பாராட்டை பெற்றது. தொடர் ஹிட் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் வசூல் நாயகனாகவும் மாறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் செம ஹேப்பி
அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து பராசக்தி படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் 80களில் நடப்பது போன்று உருவாகி வருகிறது. மதராஸி திரைப்படம் செப்டம்பரில் வெளியாவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பாேடு காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. வட இந்தியர்கள் தமிழர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது போன்றும், இதில் சிவகார்த்திகேயன் அன்டர் பிளே செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பராசத்தி வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன்
இயக்குநர் வெங்கட் பிரபு கோட் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இப்படத்தின் மொத்த கதையும் கேட்ட பின்னரே சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்புக்கொண்டாராம். கோட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால், வெங்கட் பிரபுவுடன் இணைவதில் தயக்கம் காட்டினாராம். இப்போது அந்த பிரச்னையெல்லாம் தீர்ந்து வெங்கட் பிரபு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதாவது, தலைவன் தலைவி பட இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் குறித்து பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பு எப்போது?
சிவகார்த்திகேயனுடனான தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என்று கூறியுள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்lதிருந்தார். இதில், விஜய் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியை கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. விஜயின் அரசியல் வருகையால் விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் எனவும் கோலிவுட் வட்டாரமே அதே பேச்சாகத்தான் இருந்தது. அமரன் படத்தின் விழாவின் போதும் துப்பாக்கியின் கனம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கும் சிவகார்த்திகேயன் நிதானமாக பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















