VP - Yuvan Combo Finish: முடிவுக்கு வந்த வெங்கட்பிரபு - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி ...! புது இசையமைப்பாளர் யார் தெரியுமா...?
வெங்கட்பிரபு அசோக்செல்வவனை நாயகனாக வைத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். ஆனால், இந்த படத்திற்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவில்லை.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட்பிரபு. சென்னை 600028 என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு நகைச்சுவையின் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான வெங்கட்பிரபு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் அவரது அடுத்த படத்திற்கு மன்மதலீலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக அசோக்செல்வன் நடிக்கிறார்.
Here is the 1st look of my next fun quirky ride! #AVenkatPrabhuQuickie #VP10 #Manmathaleelai (tamil) #Manmadaleela (telugu) with my brother @AshokSelvan a #IsaiPlayboy @Premgiamaren musical @that_Cameraman @UmeshJKumar thanks to @Rockfortent thank q @TSivaAmma saar! pic.twitter.com/1CNWBkCBRd
— venkat prabhu (@vp_offl) January 15, 2022
சென்னை 600028 முதல் மாநாடு படம் என வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய 9 படங்களுக்குமே யுவன்சங்கர்ராஜாதான் இசையமைத்துள்ளார். ஆனால், இந்த படத்திற்கு முதன்முறையாக யுவன்சங்கர்ராஜா இசையமைக்கவில்லை. அவருக்கு பதிலாக வெங்கட்பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரேம்ஜி நடிகர் மட்டுமின்றி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர். ஆனால், யுவன்சங்கர் ராஜாவிற்கு பதிலாக பிரேம்ஜியை இசையமைப்பாளராக வெங்கட்பிரபுவுடன் பணியாற்றுவது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயத்தில் மன்மதலீலை படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
From a fanboy to working with @vp_offl anna, a surreal moment for me. Presenting you the first look of #ManmadhaLeeai , a Venkat Prabhu Quickie! #VP10
— Ashok Selvan (@AshokSelvan) January 15, 2022
Film is a blast! 😎🔥@Premgiamaren musical @Rockfortent @SamyukthaHegde @smruthi_venkat @IRiyaSuman@teamaimpr pic.twitter.com/Ddbpey52nH
மன்மதலீலை படத்தின் அறிவிப்புக்கு அசோக்செல்வனும் நன்றி தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபுவின் ரசிகனாக இருந்து அவருடன் பணியாற்றுவதற்கு நன்றி. படத்தின் போஸ்டரில் அசோக் செல்வன் ஒருபுறம் முத்தங்கள் கொண்ட முகத்துடனும், இன்னொரு முகத்தில் கோபத்துடன் காயத்துடன் தாடியுடன் இருப்பது போன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

