மேலும் அறிய

33 Years of Keladi Kanmani: ஹீரோவாக அசத்திய எஸ்.பி.பி.. காலம் கடந்தும் ஒலிக்கும் ‘கேளடி கண்மணி’ .. 33 வருஷங்களாச்சு...

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர் என பெயர் எடுத்த வசந்த் இயக்கிய முதல் படமான கேளடி கண்மணி வெளியாகி இன்றோடு 33 வருடங்கள் ஆகிறது. 

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர் என பெயர் எடுத்த வசந்த் இயக்கிய முதல் படமான கேளடி கண்மணி வெளியாகி இன்றோடு 33 வருடங்கள் ஆகிறது. 

வசந்தின் விசிட்டிங் கார்டு

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்த், 1990 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஹீரோவாக நடித்திருந்தார் ராதிகா ரமேஷ் அரவிந்த் அஞ்சு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்து இருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படம் 250 நாட்களை தாண்டி திரையரங்களில் வெற்றிகரமாக ஓடியது.

படத்தின் கதை

ரமேஷ் அரவிந்தும், அஞ்சுவும் இளம் காதலர்களாக இருப்பார்கள். திருமணம் செய்ய நினைக்கும் நேரத்தில் அஞ்சுவுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய் இருப்பது தெரிய வருகிறது. காதலனோடு சேர்ந்து வாழ முடியாத சோகத்தில் இருக்கும் அஞ்சுவுக்கு இளம் வயதில் தான் செய்த பயங்கரமான சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றது. 

அதாவது மனைவியை இழந்த எஸ்.பி.பி. ராதிகாவுடன் காதல் வயப்படுவார். ஆனால் புது அம்மாவை ஏற்க விரும்பாத குழந்தை அஞ்சுவோ அடம்பிடித்து திருமணத்தை நிறுத்த ராதிகா பிரிந்து விடுவார். அந்த தவறை உணர்ந்து, தன் காதல் சேராத இடத்தில் அப்பாவின் பழைய காதலை சேர்க்க நினைப்பார். அவரின் லட்சியம் நிறைவேறியதா என்பதே இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும். 

பல சிறப்புகளை கொண்ட படம் 

பாலசந்தரிடம் உதவியாளராக வசந்த் இருந்ததால் படத்தின் பல இடங்களில் அவரின் படத்தைப் போலவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சாரதா டீச்சராக ராதிகா கலக்கியிருப்பார். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க சுஹாசினி தான் முடிவு செய்ய்யப்பட்டார். ஆனால் அவர் நடிக்காமல் போக ராதிகா உள்ளே வந்தார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதலில் தயங்கியிருக்கிறார். அவரின் தயக்கத்துக்கு காரணம், வசந்தின் முதல் படமாக இருக்கிறதே, அவரின் சினிமா கேரியர் என்னவாகும் என்பது தான். 

மேலும் ரமேஷ் அரவிந்த் இப்படத்தில் இருந்து தான் சாக்லேட் பாயாக வலம் வந்தார். பேபி அஞ்சுவின் குழந்தை பருவ கேரக்டரில் நீனா நடித்திருப்பார். காது கேளாத, பேசமுடியாத கேரக்டரில் பூர்ணம் விஸ்வநாதன், ஸ்ரீவித்யா இருவரும் அசத்தியிருப்பார்கள். 

பட்டையை கிளப்பிய பாடல்கள் 

கேளடி கண்மணி படத்திற்கு பெரும் பலமாக இளையராஜா இசை அமைந்தது. தென்றல்தான் திங்கள்தான், மண்ணில் இந்தக் காதலன்றி, நீ பாதி நான் பாதி கண்ணே, கற்பூர பொம்மையொன்று என ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகமாக அமைந்தது. இந்த படம் பல பிரிவுகளில் பல விருதுகளை வென்றது. என்னதால் 33 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கேளடி கண்மணி... புத்துணர்ச்சி மாறாமல் ஜொலித்து கொண்டிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget