Director Selva bharathy : என்னது அது ரம்பா இல்லையா? 'வண்ண நிலவே' பாட்டுக்கு டூப் போட்டு ஆட வைத்த இயக்குநர்.. அவரே பகிர்ந்த சீக்ரெட்
Director Selva Bharathy : 'வண்ண நிலவே' பாடலில் ரம்பாவாக வந்த நடிகை ரம்பாவே இல்லை. டான்சரை வைத்து ரம்பாவுக்கு டூப் போட்டு 46 ஷாட்கள் எடுக்கப்பட்டது. உண்மை பகிர்ந்த இயக்குநர் செல்வ பாரதி.
இன்று தமிழ் சினிமாவின் ஸ்டார் நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான மசாலா படங்களில் நடித்து வந்தார். அவரால் மிகவும் மென்மையான கதாபாத்திரங்களிலும் மிக சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்த ஒரு திரைப்படம் 'பூவே உனக்காக'. அப்படம் நடிகர் விஜய் திரைப் பயணத்தில் மிக முக்கியமான டர்னிங் பாயிண்டாக அமைந்த ஒரு திரைப்படம். அதை தொடர்ந்து அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன.
தெலுங்கு படத்தின் ரீமேக் :
அப்படி 1998ம் விஜய் நடிப்பில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் தான் 'நினைத்தேன் வந்தாய்'. கலகலப்பான ஒரு ஹீரோவாக விஜய் நடித்த இப்படத்தில் அவருக்கு ரம்பா மற்றும் தேவயானி என இரு ஹீரோயின்கள். கே. செல்வபாரதி இயக்குநராக அறிமுகமான முதல் படமே திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 'பெல்லி சந்ததி' என தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீ மேக் தான் 'நினைத்தேன் வந்தாய்' திரைப்படம்.
சூப்பர்ஹிட் பாடல்கள் :
தேனிசை தென்றல் தேவாவின் இசையில் வெளியான இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. 90ஸ் கிட்ஸ்கள் மட்டுமின்றி இப்படத்தின் பாடல்கள் இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. அந்த வரிசையில் நடிகர் விஜயின் ட்ரீம் சாங்கான 'வண்ண நிலவே... வண்ண நிலவே... வருவது நீதானா" பாடல் இன்று வரை முணுமுணுக்க வைக்கும் ஃபேவரட் பாடல்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
வண்ண நிலவே சீக்ரெட் :
இப்பாடல் உருவான கதை குறித்து சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் ஷாக்கான தகவல் பகிர்ந்து இருந்தார் இயக்குனர் செல்வபாரதி. அது ஒரு ட்ரீம் சாங் என்பதால் ரம்பா முகத்தை மறைத்தவாரே பாடல் முழுவதும் ட்ராவல் செய்து இருப்பார். பாடலின் பாதி ஷூட்டிங் மட்டுமே முடிந்து இருந்த நிலையில் நடிகை ரம்பா எந்த ஒரு தகவலும் சொல்லாமல் நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுத்து அங்கு சென்றுவிட்டாராம்.
ரம்பாவுக்கு டூப் :
இதனால் டென்ஷனான இயக்குநர், ரம்பா இல்லாமலேயே அந்த பாடலின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். பாடலில் ரம்பாவாக இடம்பெற்ற 46 ஷாட்களை வேறு ஒரு டான்சரை வைத்து எடுத்து முடித்துள்ளார் இயக்குநர். ஊஞ்சல் காட்சி மற்றும் நேரடியாக ரம்பா நடந்து வரும் காட்சி தவிர அந்த பாடலில் இடம்பெற்ற மற்ற அனைத்து காட்சிகளும் டூப் வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்ற ஷாக்கான தகவலை தெரிவித்து இருந்தார் இயக்குநர் செல்வபாரதி. பாடலின் அவுட்புட் பார்த்து டென்ஷனான ரம்பாவும் அவரின் குடும்பத்தினரும் எழுந்து சென்றுவிட்டார்களாம்.
இந்த ரகசிய தகவல் 'நினைத்தேன் வந்தாய்' படம் வெளியாகி 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தெரியவருகிறது அந்த பாடலில் வந்தது ரம்பா இல்லை என்பது. நடிகை ரம்பாவின் தீவிர ரசிகர்களுக்கு இந்த செய்தி மிக பெரிய ஷாக்கிங்காக இருந்தது.