![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
’கமலை சமாளிக்க என்ன பவுன்சரா மாத்திடுவாங்க....’ - கமலுடனான திரைப் பயணம் குறித்து சந்தான பாரதி!
"இந்த மாதிரியான நேரங்களில் என்னை கூட்டிக்கொண்டுபோய் பவுன்சர் போல் அவர் முன் அமரவைத்து விடுவார்கள். கமலை சமாளிப்பதற்காகவே அவருடன் நிறைய படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன்" - சந்தான பாரதி
![’கமலை சமாளிக்க என்ன பவுன்சரா மாத்திடுவாங்க....’ - கமலுடனான திரைப் பயணம் குறித்து சந்தான பாரதி! Director Santhana Barathi shares interesting news about Kamal and Vikram movie ’கமலை சமாளிக்க என்ன பவுன்சரா மாத்திடுவாங்க....’ - கமலுடனான திரைப் பயணம் குறித்து சந்தான பாரதி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/31/154bf64d0bccf8e3c4677b83a5a3ca41_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம், வரும் ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நரேன், செம்பன் வினோத் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
View this post on Instagram
கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கமலின் ஐம்பது ஆண்டுகளாக நண்பரும், கமலை வைத்து இயக்கியவர்களுள் முக்கியமானவருமான சந்தான பாரதி நடித்துள்ளார்.
என் நண்பர் கமல் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட், கோபக்காரர்!
இந்நிலையில், கமலுடன் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை சந்தான பாரதி பகிர்ந்துள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”கமலுக்கு நிறைய கோபம் வரும். அவர் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட். உங்களிடம் பழகினால் இந்த இந்த குணங்களெல்லாம் வேண்டுமென அவர் எதிர்பார்ப்பார்.
அவர் செய்யும் வேலையில் 75 சதவீதமாவது நீங்கள் செய்ய வேண்டுமென கமல் எதிர்ப்பார்ப்பார். இல்லையென்றால் அவருக்கு கோபம் வந்துவிடும்.
நான் கமலை சமாளிக்கும் பவுன்சர்
ஸ்க்ரிப்டில் இருக்கும் தகவல்களின்படி செட்டில் பொருள்கள் இல்லையென்றால் அவருக்கு கோபம் வரும். இப்படி வேலை சம்மந்தப்பட்ட விஷயங்களில் தான் அவருக்கு கோபம் வருமே தவிர, தனிப்பட்ட முறையில் அவர் என்றுமே கோபித்துக் கொண்டதில்லை.
ஆனால் தனிப்பட்ட முறையில் யாராவது ஒரு கலைஞர் மற்றொரு கலைஞரை அவமதித்தால் அவருக்கு கோபம் வரும். இந்த மாதிரியான நேரங்களில் என்னை கூட்டிக்கொண்டு போய் பவுன்சர் போல் அவர் முன் அமரவைத்து விடுவார்கள். கமலை சமாளிப்பதற்காக அவருடைய நிறைய படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
லோகேஷ் கடும் உழைப்பாளி
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பற்றி பேசிய சந்தான பாரதி, ”அவர் ரொம்ப பெரிய உழைப்பாளி. ஷீட்டிங்கின் போது நமக்கு எந்த டென்ஷனும் இருக்காது. அவர் டென்ஷனாகியோ, கோபம் வந்தோ நாங்கள் பார்த்ததில்லை. கமலோட பெரிய விசிறி.
ஏன் இந்தப் படத்துக்கு விக்ரம் எனப் பெயர் வைத்தீர்கள் எனக் கேட்டதற்கு தான் அந்த ஆண்டு தான் பிறந்ததாக என்னிடம் தெரிவித்தார். ஒரு மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் நடித்தது எனக்கு நடித்த மாதிரியே இல்லை. அவருடன் வழக்கம்போல் திரைக்கு வெளியே இருப்பது போல் தான் உணர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)