Director Rajasenan: திடீரென தியேட்டருக்கு பெண் வேடமிட்டு வந்த இயக்குநர்.. மிரண்டு போன ரசிகர்கள்.. என்ன காரணம்?
படத்தின் முதல் காட்சிக்கு பிரபல இயக்குநர் பெண் வேடமணிந்து தியேட்டருக்கு வருகை தந்தது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் முதல் காட்சிக்கு பிரபல இயக்குநர் பெண் வேடமணிந்து தியேட்டருக்கு வருகை தந்தது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குனர்:
90களில் மலையாளத் திரையுலகில் வெற்றி பெற்ற இயக்குனர்களில் ஒருவர் ராஜசேனன். 1984 ஆம் ஆண்டு ஆக்ரஹம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பாவம் குரூரன், சௌந்தர்யாபிணக்கம், சாந்தம் பீகாரம், ஒன்னு ரெண்டு மூணு, கனிகணும் நேரம், கடிஞ்சூல் கல்யாணம், அயலதே அடேஹம், மேலப்பறம்பில் ஆன்வீடு, சிஐடி உன்னிகிருஷ்ணன் பி.ஏ., பி.எட்., வர்தாக்ய புராணம், அனியன் பாவா சேதன் பாவா, ஆதியதே கண்மணி, ஸ்வப்னா லோகதே பாலபாஸ்கரன், சத்தியபாமக்கொரு பிரேமலேகனம், ஸ்வப்னம் கொண்டு துலாபாரம், கனக சிம்ஹாசனம், பார்யா ஒண்ணு மக்கள் மூன்னு, ரோமியோ, ரேடியோ ஜாக்கி என 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
நடிகராக 9 படங்களிலும், இசையமைப்பாளராக 2 படங்களிலும், 6 தொலைக்காட்சி தொடர்களில் இயக்குநராகவும் தனது திறமையை ராஜசேனன் நிரூபித்துள்ளார். இவர் தற்போது ஞானம் பின்னொரு ஞானம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராஜசேனனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சுதீர் கரமனா, இந்திரன்ஸ், ஜாய் மேத்யூ ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
பெண் வேடம்:
இந்த படம் கடந்த ஜூன் 30 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. பொதுவாக படக்குழுவினர் முதல் காட்சியில் ரசிகர்களுடன் படம் பார்த்து அவர்களின் விமர்சனங்களை கேட்டு தெரிந்து கொள்வது வழக்கம். இப்படியான நிலையில், இயக்குநர் ராஜசேனனோ யாரும் எதிர்பாராத விதமாக பெண் வேடத்தில் படம் பார்க்க வந்தார். சிவப்பு நிற சேலையில் அவரை பார்த்த ரசிகர்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு பெண் போல அச்சு அசலாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞானம் பின்னொரு ஞானம் படம் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டதால், ஒரு பையன் பெண்ணாக வளர்க்கப்படுவதைப் பற்றிய கதையை கொண்டுள்ளது. இதற்காகவே அவர் பெண் வேடமிட்டு வந்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராஜசேனன் கடைசியாக 2014 ஆம் ஆண்டு படம் இயக்கியிருந்தார். அதன்பிறகு 9 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தை இயக்கி கம்பேக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.