Prabhas: பிரபாஸ் ஒரு சோம்பேறி... திருமணம் செய்யாதது குறித்து இயக்குநர் ராஜமெளலி பகிர்ந்த ரகசியம்
44 வயதாகும் நடிகர் பிரபாஸ் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை பாகுபலி பட இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்
பிரபாஸ்
பான் இந்திய நடிகர் பிரபாஸ் (Prabhas) அடுத்தடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் தொடங்கிய அவரது இந்த பயணம் சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் சலார் போன்ற அடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்து வருகிறது. இதில் ஒரு சில படங்கள் பெரியளவில் தோல்வியை சந்தித்தாலும் பிரபாஸின் மார்கெட் சரிவதேயில்லை. தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு படுபிஸியாக இருந்து வரும் நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்த கேள்விகளும் எழுந்தபடி இருக்கின்றன.
டோலிவுட்டின் பேச்சுலர் பிரபாஸ்
44 வயதை எட்டியிருக்கும் பிரபாஸ் இதுவரை சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வாழ்க்கையில் புதியாக ஒருவர் வர இருப்பதாக பிரபாஸ் பதிவிட்டிருந்தார். இதனை அவரது திருமணத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டார்கள் ரசிகர்கள். ஆனால் இதனை அடுத்து பிரபாஸின் திருமணம் குறித்த எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமெளலி பிரபாஸ் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற காரணத்தை தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் ஒரு சோம்பேறி
பிரபாஸ் குறித்து ராஜமெளலி ‘ பிரபாஸ் ஒரு மிகப்பெரிய சோம்பேறி. அதனால் திருமணம் செய்துகொள்வதிலும் சோம்பேறித் தனம் காட்டி வருகிறார். ஒரு பெண்ணை தேடிப் பிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு ஒரு பெரிய வேலையாக இருக்கிறது. அதனால் தான் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கல்கி 2898
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் கல்கி 2898. இப்படத்தின் அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். வைஜயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. சுமார் 600 கோடி செலவில் 3 ஆண்டுகள் எடுக்கப் பட்டுள்ள இப்படத்திற்கு செர்பிய நாட்டு ஒளிப்பதிவாளர் Djordje Stojiljkovic என்பவர் ஓளிப்பதிவு செய்துள்ளார். வரும் ஜூன் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்று வருகிறது