விஜய்க்கு கட்சி துவங்கும் தைரியம் வந்தது அப்படிதான்...இயக்குநர் பார்த்திபன் என்ன இப்படி சொல்லிட்டார்
R Parthiban on Vijay : தவெக தலைவர் விஜய் குறித்து இயக்குநர் பார்த்திபனின் எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது

விஜய் பற்றி இயக்குநர் பாத்திபன்
இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் தவெக விஜய் பற்றிய பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது " கல்யாணசுந்தரம் என்கிற தான் இயக்கவிருந்து பின் கைவிடப்பட்ட படம் குறித்து பதிவிட்ட பார்த்திபன் பலர் அறியாத தகவலையும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
" கல்யாணசுந்தரம் , போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம். ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி ஙைத்தேன்.அதுவே பின் தொடரப்பட்டது பலரால். பின்னெரு காலத்தில் தளபதி விஜய் என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். “ இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் “என அப்போது புரட்டிப் பேசினேன் அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு கட்சித் துவங்கும் தைரியம் வந்தது. " என பார்த்திபன் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
கல்யாணசுந்தரம்’
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 20, 2025
போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம்.
ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி ஙைத்தேன்.அதுவே பின் தொடரப்பட்டது பலரால். பின்னெரு… pic.twitter.com/ub6IxkpxzJ
ஜனநாயகன்
விஜயின் ஜன நாயகன் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தை கே.வி.என் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பாபி தியோல் , பிரியாமணி , கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
#HBDThalapathyVijay ❤️
— KVN Productions (@KvnProductions) June 21, 2025
Let the celebration continue 🔥#JanaNayaganTheFirstRoar ▶️ https://t.co/Q981uzk8jA#JanaNayagan#Thalapathy @actorvijay sir #HVinoth @KvnProductions @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain… pic.twitter.com/w3pLjT1ALL




















