ரிவ்யூவர்களுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கு...பிரேம் குமார் கருத்திற்கு கொந்தளித்த ப்ளூ சட்டை
திரைப்பட விமர்சகர்களுக்கு மன ரீதியான பிரச்சனைகள் இருப்பதாக 96 பட இயக்குநர் பிரேம்குமாரின் கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையாகி வருகிறது

96 , மெய்யழகன் என இரு தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் கவனமீர்த்தவர் இயக்குநர் பிரேம்குமார். கார்த்தி அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெய்யழகன் திரைப்படம் பெரும்பாலும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தும் இப்படத்தின் நீளம் அதிகமிருப்பதாக விமர்சகர்கள் கூறவே படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடியில் மெய்யழகன் படம் வெளியானபோது ரசிகர்கள் விமர்சகர்களின் கருத்திற்கு மாறாக ரசிகர்கள் இந்த காட்சிகளையும் ரசிக்கவே செய்தார்கள். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரேம்குமார் பேசினார். ரிவியூவர்கள் குறித்து பிரேம்குமாரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரிவியூவர்களுக்கு மனநல பிரச்சனை இருக்கிறது
"மெய்யழகன் படத்தை நான் மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் அதை கொண்டாடி இருப்பார்கள், தமிழில் எடுத்ததுதான் தவறு என என்னிடம் பல பேர் கூறினார்கள். இருந்தாலும் OTT-யில் எனக்கு பாராட்டுகள் கிடைத்துவிட்டது. பைரசியை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக ரிவ்யூவர்களைAv பார்க்கிறேன். அவர்களுக்கு மன ரீதியான பிரச்னை இருக்கிறது, இதைச் சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை” என அவர் தெரிவித்தார். அவரது கருத்திற்கு திரைப்பட விமர்சகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
பிரேம்குமாருக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி
யூடியூப் ரிவியூவரான ப்ளூ சட்டை மாறன் பிரேம் குமாரின் கருத்து குறித்து தனது எக்ஸ் தளத்தில் இப்படி பதிவிட்டுள்ளார். " மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் - எழுத்தாளர் ஜி.நாகராஜன்: '96' படம் வெளியாகறதுக்கு முதல் நாள் நைட்டு, அவ்வளவு பெரிய பஞ்சாயத்துல அதன் தயாரிப்பாளர் சிக்கி இருந்தாரு.. இந்தப்படத்தை ரிலீஸே பண்ண முடியாது அப்படிங்கற கொடுமையான கஷ்டத்துல இருந்தாரு.. அன்னைக்கு நைட் நடந்த பஞ்சாயத்துல விஜய் சேதுபதி, அவருடைய சம்பளத்துலருந்து மிகப்பெரிய தொகையை விட்டுக் கொடுத்தாரு. "இந்தப்படம் எல்லாம் தேறவே தேறாது" அப்படின்னு டிஸ்ட்ரிபியூட்டர் சைடுல இருந்தும் சொல்லப்பட்டது. மறுநாள் விடியுது.. படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க... மக்கள்கிட்ட இந்த படம் பத்தின பெரிய எதிர்பார்ப்போ, ஆர்வமோ இல்லாம லேசான கூட்டத்தோடுதான் படம் ஆரம்பிக்குது... ஃபர்ஸ்ட் ஷோ முடிஞ்ச உடனே மக்களை விட ரிவியூவர்ஸ் எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி கொண்டாடி தீர்த்தாங்க.. இப்படி ஒரு படம் தமிழ்ல அபூர்வம், குறிஞ்சிப்பூ அப்படி இப்படின்னு எழுதி திண்டாட வெச்சாங்க... Intact, அந்த ரிவ்யூ'க்கு அப்புறம் மக்கள் கூட்டம் கூட்டமா தியேட்டருக்கு போக ஆரம்பிச்சாங்க.. அந்த ரெண்டு நாள்ல படம் மிகப்பெரிய கலெக்ஷனை பெற ஆரம்பிச்சது.. இன்னொரு பக்கம் ராட்சசனும் பயங்கரமா ஓட ஆரம்பிச்சது.. மக்கள் ரெண்டு படத்துக்கும் மிகப் பிரமாதமான வரவேற்பைக் கொடுத்தாங்க.. ரிவ்யூவர்ஸும் சூப்பரான ரிவியூஸை ரெண்டு படத்துக்கும் கொடுத்திருந்தாங்க . ஒரு நெகட்டிவ் ரிவ்யூ கூட இந்த இரண்டு படங்களுக்குமே வரல அப்படிங்கறது குறிப்பிடத்தக்கது. அவ்ளோ நெருக்கடியில இருந்த தயாரிப்பாளர், படத்தோட வெற்றில பெரிய ஆசுவாசம் அடைஞ்சாரு.. படம் மிகப்பெரிய ஹிட்.. ராம்சரண், சேரன், சமந்தா'ன்னு அன்னைக்கு டாப்ல இருந்த அத்தனை தமிழ், & தெலுங்கு ஆக்டர்களும் படத்தைப்பத்தி வலிய வந்து பேசினாங்க.. இது அத்தனையும் இன்னைக்கும் யூ-ட்யூப்ல இருக்கு... இந்த ஹிட்டுக்கு அடுத்த நாளோ, அதுக்கு அடுத்த நாளோ பிரேம் பத்திரிகையாளர்களை சந்திச்சாரு.. வரிசையா நிறைய பேட்டிகள் கொடுத்தாரு... இந்த படத்தை விமர்சகர்கள்தான் 'ஆஹா ஓஹோன்னு எழுதி எல்லா மக்கள்கிட்டயும் கொண்டு போய் சேர்த்தாங்க. ரிவியூவர்ஸ் இல்லனா இப்படி ஒரு வெற்றி சாத்தியமே இல்லைன்னு சொன்னாரு... ரிவியூவர்ஸ் எல்லாரையும் கடவுள் போல பார்க்கிறேன் அப்படின்னு கூட சொன்னாரு... அன்னைக்கு இதே ரிவ்யூவர்ஸ்தான் அவ்வளவு நல்லவங்க, தெய்வம், நல்ல படத்தை கை விட மாட்டாங்க" அப்படின்னு பேசின அதே பிரேம்குமார்தான், இன்னைக்கு ரிவ்யூவர்ஸை மனநலம் பாதிச்சவங்கன்னு சொல்லியிருக்காரு... ஜி. நாகராஜன் மனிதர்களைப்பத்தி ஒரு மிகப்பிரபலமான ஒரு quote சொல்லியிருப்பாரு... அதுதான் நியாபகத்துக்கு வருது.. உங்களுக்கும் அந்த Quote தெரிஞ்சா கமெண்ட்'ல சொல்லிட்டு போங்க.."





















