Perarasu Speech: "நடிகர்களின் கைக்குள் தான் சினிமா; இயக்குனர்களை மதிப்பதில்லை" - பேரரசு ஆவேசம்
இன்று இயக்குனர்கள் மீதான மரியாதை சுத்தமாக கிடையாது. ஹீரோக்களின் கைக்குள் தான் சினிமா இருக்கிறது. அதனால் தான் என்னவோ இயக்குனர்களில் பெரும்பாலானோர் நடிக்க கிளம்பி விட்டார்கள்
ஒளிப்பதிவாளர் கே.பி. தனசேகரன் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுக்கும் திரைப்படம் 'குருமூர்த்தி'. ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் ராம்கி முக்கியமான ஒரு ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார் பூனம் பஜ்வா. சத்யதேவ் உதயசங்கர் இசையைமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ லான்ச் இரு தினங்களுக்கு முன்னர் தான் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு, ஆர். கே.செல்வமணி, ஸ்ரீராம் கார்த்திக், சக்தி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் பேரரசுவின் வேண்டுகோள் என்ன?
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தங்களின் அனுபவங்களை மேடையில் பகிர்ந்தனர். அந்த வகையில் இயக்குனர் பேரரசு மிகவும் மனவேதனையில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில் " நடிகர் ராம்கிக்கு இப்படத்தில் நல்ல சான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஹீரோவாக கூட அவர் மூன்று நடிகைகளுடன் டான்ஸ் எல்லாம் ஆடியது இல்லை. இனிமேல் அவருக்கு அதிர்ஷ்டம் தான். இன்று இயக்குனர்கள் மீதான மரியாதை சுத்தமாக கிடையாது. ஆனால் ஹீரோக்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களின் கைக்குள் தான் சினிமா இருக்கிறது. அந்த காரணத்தால் தான் என்னவோ இப்போது இயக்குனர்களில் பெரும்பாலானோர் நடிக்க கிளம்பி விட்டார்கள். இனியாவது தயாரிப்பாளர்களின் சிரமம் புரியாத கவலைப்படாத இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க கூடாது" என மிகவும் மனவேதனையுடன் பேசியிருந்தார்.
இயக்குனர் ஆர்.கே. செல்வமணி அரசுக்கு வேண்டுகோள் :
இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில் " இந்தியாவியில் ஒரு சிறந்த கேமராமேனாக இருக்கும் நட்டி நட்ராஜ், சினிமாவில் நடிக்க வேண்டும் எனும் தீராத தாகத்தால் சிறந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் சினிமா துறையை ஒரு தொழில் துறையாக அறிவித்த அரசு அதற்கு எந்த விதமான உதவிகளையும் வழங்குவதில்லை. வங்கியில் கடனும் வழக்கப்படுவதில்லை. சினிமா துறைக்கு வழங்கப்பட்ட தொகையில் வாராக்கடனாக இத்தனை கோடி உள்ளது என்கிறார்களே.. தொழித்துறைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடனில் பல லட்சம் கோடி பணம் வாராக்கடனாக இருப்பதாக தகவல்கள் வெளியாவது எப்படி? அது மட்டும் எப்படி சாத்தியமானது. திரைத்துறையில் ஓய்வு பெற்ற தொழிலார்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை வழங்கப்படவேண்டும்" என திரைத்துறையின் நலனுக்காக செய்யப்படவேண்டிய சில வழிமுறைகள் குறித்து பேசினார் ஆர்.கே. செல்வமணி.
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. கதாநாயகனாக நட்டி நடராஜ், முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி, கதாநாயகியாக பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். @PoonamBajwa555 #gurumoorthy pic.twitter.com/qiBmcZkGXL
— News Cafe Tamil (@newscafetamil) November 8, 2022