மேலும் அறிய

Sivakasi Re- Release: அடேங்கப்பா.. விஜய் படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறா? - நீங்களே பாருங்க!

திருப்பாச்சி படத்தின் கதையில் என்னை நம்பி அவர் நடித்தார். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து என்னையை நம்பி சிவகாசி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த சிவகாசி படம் ரீ-ரிலீஸாகி இருக்கும் நிலையில் அந்த படம் உருவானது தொடர்பாக இயக்குநர் பேரரசு நேர்காணல் ஒன்றில் நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

ஒரு நேர்காணலில் பேசிய அவர், “நான் இயக்குநராக அறிமுகமான திருப்பாச்சி படத்தின் கதை விஜய்க்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அதனை நம்பி அவர் நடித்தார். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து என்னையை நம்பி சிவகாசி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். நான் முதலில் படத்தின் ஒன்லைனை மட்டும் தான் சொன்னேன். திருப்பாச்சி ரிலீஸ் ஆன ஒரு வாரம் கழித்து நான் என் ஊருக்கு சென்று விட்டேன். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் என்னை அழைத்து பேசினார். சென்னைக்கு வந்ததும் பார்க்கலாம் என சொன்னதால் அவரை நேரில் சந்தித்தேன். பின்னர் விஜயை சந்தித்தேன்.

நிஜத்தில் நடந்த சம்பவம்

அப்போது என் ஆழ்மனதில் ஒரு கதை இருந்தது. என் நண்பரின் குடும்பத்தில் அந்த சம்பவம் நடந்தது. அதைப் பற்றி ஒன்லைன் மட்டும் சொல்ல விஜய்க்கு அது பிடித்திருந்தது. அதேசமயம் தாராவி போயிருக்கும்போது ஒரு தமிழரை சந்தித்தேன். அந்த நபர் நான் ஊருக்கு போய் 15 வருடம் ஆகி விட்டது என சொல்லி குடும்ப சூழலை சொன்னார். இந்த இரு சூழலும் சிவகாசி கதைக்கு காரணமாக அமைந்தது. 

சிவகாசி படத்தில் வில்லனாக நடிக்க பிரகாஷ்ராஜ் ரொம்ப யோசித்தார். திருப்பாச்சி போல சீரியஸ் ஆக்‌ஷன் இல்லாமல், ஹியூமர் கலந்த கதையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தபோது தான் அண்ணன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ் உள்ளே வந்தார். வெங்கட்பிரபுவை ஒரு பேட்டியில் பார்த்து தான் நடிக்க வைக்கலாம் என்ற ஐடியா வந்தது. அப்போது அவர் ஹீரோவாக நடித்த நிலையில் சின்ன கேரக்டரில் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் விஜய் படம், சின்ன கேரக்டர் இருந்தாலும் ஸ்கோப் இருக்கும் என ஒப்புக் கொண்டார். 

இசையில் இணைந்த குடும்பம்

இசையமைப்பாளராக முதலில் வித்யாசாகரை போடலாம் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சொன்னார். நான் ஸ்ரீகாந்த் தேவா பெயரை சொன்னேன். முதலில் வாடா வாடா பாடல் பதிவு செய்யப்பட்டபோது ஏ.எம்.ரத்னம் வரவில்லை. என்னுடைய பிடிவாதம் பார்த்து ஒருமனதாக ஒப்புக்கொண்டார். சிவகாசி, மஜா படங்கள் ஒரே நாளில் வந்தது. மஜா படத்திற்கு வித்யாசாகர் தான் இசை. அதைவிட சிவகாசி பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. 

தேவா தான் சிவகாசி படத்திற்கு பின்னணி இசையமைத்தார். சபேஷ் முரளி சேர்ந்தும் பணியாற்றினார். அதேபோல் கோடம்பாக்கம் ஏரியா பாடலை விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரை பாட வைத்தேன். பாடல் பதிவு முடிந்த பிறகு தான் அம்மா பாடிய விஷயமே விஜய்க்கு தெரிந்தது. அவ்வளவு பாராட்டினார். அந்த பாட்டின் வரிகள் தேர்தல் காலத்தில் விஜய்க்கு பொருந்தி போனது” என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget