மேலும் அறிய

Director Parthiban: இரவின் நிழல் சர்ச்சை.. பொய் சொன்னாரா பார்த்திபன்.. அவரே கொடுத்த விளக்கம் - வீடியோ!

இரவின் நிழல் திரைப்படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை என பார்த்திபன் பேசி இருக்கிறார்.

இரவின் நிழல் திரைப்படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமா இல்லையா என்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது குறித்து இயக்குநர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். 

 

இது குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பான ரசிகர்களுக்கு பணிவான வணக்கம். இரவின் நிழல் திரைப்படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை. அந்த பெருமையுடன் மட்டுமே இந்தப்படம் தயாரிக்கப்பட்டது. அந்த பெருமைக்காக மட்டுமே, மிகப்பெரிய பொருட் செலவில், 3 வருடங்களாக என்னை மாதிரி அர்ப்பணிப்புள்ள கலைஞனால் எடுக்கப்பட்ட படம் இது. இந்தப்படம் முதல் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்  படமா அல்லது இராண்டாவது நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்பதை தாண்டி, இந்தப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி இருக்கிறது. அனைவரும் படத்தை பாருங்கள். முடிவை உங்களுடைய பார்வைக்கே விட்டு விடுகிறேன்.” என்று பேசியிருக்கிறார். 

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல். கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியான இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இரவின் நிழல் படம் தான் உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

ஆனால் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் fish and cat என்ற படம் தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றும், இரவின் நிழல் இல்லை என்றும் தெரிவித்து பார்த்திபனை குற்றம்சாட்டினார். இதற்கிடையில் இரவின் நிழல் படம் இன்று ஓடிடியில் வெளியானது. பல முறை இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், இன்று காலை தனக்கு கூட தெரிவிக்காமல் அமேசானில் படம் வந்துவிட்டதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் முறையான அறிவிப்போடு வந்திருக்கலாம் என்ற தனது ஆதங்கத்தையும் வீடியோ வாயிலாக அவர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதிலும் கூட உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல்தான் என அவர் கூறியிருந்தார்.

ஆனால் அமேசான் ப்ரைம்  தனது தளத்தில் இப்படம் உலகின் 2வது நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் என தெரிவித்து இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் தியேட்டரில் இரவின் நிழல் படத்தின் கதைக்குள் செல்வதற்கு முன் காட்டப்படும் மேக்கிங் காட்சிகள் இடம் பெறவில்லை. இதனை குறிப்பிட்டு பலரும், சமூக வலைத்தளத்தில் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும் என தெரிவித்து அமேசான் தளத்தில் இடம் பெற்ற இரவின் நிழல் படம் குறித்த ஸ்க்ரீன்ஷாட்டுகளை பகிர்ந்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பார்த்திபன் என்ன சொல்லப் போகிறார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், அதற்கான விளக்கம் தற்போது கிடைத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget