மேலும் அறிய

Mysskin: ‘தென்பாண்டி சீமையிலே’ பாடிய இயக்குநர் மிஷ்கின்..கமல்ஹாசன் பிறந்தநாள் பார்ட்டி வீடியோ!

தென்பாண்டி சீமையிலே பாடலை மிஷ்கின் சென்ற ஆண்டு நடைபெற்ற கமல்ஹாசனின் பிறந்த நாள் பார்ட்டியில் பாடினார்.

கமல்ஹாசன் பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் 64 ஆண்டுகளாக பயணித்து வரும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் சமீபத்தில்  தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, கன்னடம் , மளையாளம் என பல திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.  கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணத்தை திறந்து வைத்தார்.

கமல் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள்

மேலும், கமலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் கமல் நடித்து வரும், நடிக்க இருக்கும் படங்களின் அப்டேட்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தனது 69ஆவது பிறந்தநாளை ஒரு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்து கமல் கொண்டாடினார். இந்த நிகழ்வில் தனக்கு நெருக்கமானவர்கள் அனைவரையும் கமல் அழைத்திருக்கிறார். இந்த பார்ட்டியில் பாலிவுட் நடிகர் அமீர் கான்,  நடிகர் சூர்யா,  நரேன், ஆர் பார்த்திபன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்துகொண்டார்கள். இந்த பார்ட்டியில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் வைரலாகின.

பாட்டு பாடிய இயக்குநர் மிஷ்கின்

இந்நிலையில் சென்ற ஆண்டு கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டு இயக்குநர் மிஷ்கின் பாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கமல் நடித்து மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் இடம்பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலை மிஷ்கின் சென்ற ஆண்டு அவரது பிறந்த நாள் பார்ட்டியில் பாடினார். இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

pic.twitter.com/oO9k8Tr6KW

 மிஷ்கின் இசையமைத்த ‘டெவில்’

இயக்குநராக அறியப்படும் மிஷ்கின் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா, இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | KeralaParandur Airport Issue | பண்ணூருக்கு பதில் பரந்தூர்..தேர்வு செய்தது ஏன்? காரணத்தை அடுக்கிய அரசுஸ்கோர் செய்த விஜய்! உளவுத்துறை கையில் REPORT! அப்செட்டில் ஸ்டாலின்வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
ICC Champions Trophy : பாகிஸ்தான் பெயரை போட முடியாது! விளையாட்டிலும் அரசியலா? பிசிசிஐ கிளப்பிய புதிய சர்ச்சை..
ICC Champions Trophy : பாகிஸ்தான் பெயரை போட முடியாது! விளையாட்டிலும் அரசியலா? பிசிசிஐ கிளப்பிய புதிய சர்ச்சை..
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்வியாடெக், கீஸ்
ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்வியாடெக், கீஸ்
Embed widget