மேலும் அறிய

Vidaamuyarchi: "நீங்க நீங்களாவே இருந்தீங்க" அஜித் காட்டிய அன்பில் ஆடிப்போன மகிழ் திருமேனி

விடாமுயற்சி படத்திற்காக அஜித்குமார் காட்டிய அன்புக்கும், அக்கறைக்கும், தந்த ஆதரவிற்கும் இயக்குனர் மகிழ் திருமேனி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. விடாமுயற்சி படத்தின் சமீபகால போஸ்டர் ரசிகர்களை ஆனந்தப்படுத்தி வருகிறது. 

விடாமுயற்சி:

நாளுக்கு நாள் வெளியாகும் ஒவ்வொரு புகைப்படத்திலும் அஜித் இளமையான தோற்றத்தில் இருப்பதே இதற்கு காரணம் ஆகும். மறுபுறம் குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் வித்தியாசமான கெட்டப்புகள் வெளியாகி அஜித் ரசிகர்களை ஆனந்தப்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்திற்காக அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மகிழ் திருமேனி நன்றி:

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் எங்களை வழிநடத்தினீர்கள், உத்வேகமாகவும், தன்னம்பிக்கையும் நீங்கள் நீங்களாகவே இருந்து அளித்ததற்கு எங்களது எல்லையற்ற அன்பும், நன்றியும். விடாமுயற்சி உண்மையிலே விடாமுயற்சியின் வெற்றியாக இருந்தது. இதற்கு குழு முழுவதும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. நன்றி.

தனிப்பட்ட முறையில், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். முதல் நாள் முதல் கடைசி நாள் வரை நீங்கள் என் மீது காட்டிய அன்பும், அக்கறையும், எனக்குத் தந்த ஆதரவும் நன்றி. அதிக அன்பு மற்றும் மரியாதையுடன் மகிழ் திருமேனி. 

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நயன்தாராவின் கணவர்  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. இதையடுத்து, லைகா நிறுவனத்திற்கு அளித்த கால்ஷீட்டில் இயக்குனராக மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

பொங்கல் ரிலீஸ்:

அவரது இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக விடாமுயற்சி உருவாகியுள்ளது. அஜித்துடன் இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமான அஜித் படமாக இல்லாமல் மிகவும் வித்தியாசமான ஆக்ஷன் படமாக விடாமுயற்சி இருக்கும் என்று கருதப்படுகிறது. 

இந்த படம் பெரும்பாலும் அஜர்பைஜானிலே எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு நீரவ்ஷா, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள விடாமுயற்சியில் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

தலைப்பு செய்திகள்

பாக்யராஜ் மறைந்ததும் வெடித்த சீனியர் - ஜூனியர் மோதல்.. வார்த்தையை விட்ட பார்த்திபன்.. நடந்தது என்ன?
பாக்யராஜ் மறைந்ததும் வெடித்த சீனியர் - ஜூனியர் மோதல்.. வார்த்தையை விட்ட பார்த்திபன்.. நடந்தது என்ன?
Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
NEW RATION CARD : 45,000 ரேஷன் கார்டு ரெடி.! இன்று முதல் வீடு தேடி வரப்போகுது- யார் யாருக்கெல்லாம்.?
45,000 ரேஷன் கார்டு ரெடி.! இன்று முதல் வீடு தேடி வரப்போகுது- யார் யாருக்கெல்லாம்.?
Mahindra SUV: மஹிந்த்ராவை கட்டிக் காப்பாற்றும் எஸ்யுவிக்கள்..! டாப் செல்லிங் மாடல் என்ன? சொதப்பும் கார் என்ன?
மஹிந்த்ராவை கட்டிக் காப்பாற்றும் எஸ்யுவிக்கள்..! டாப் செல்லிங் மாடல் என்ன? சொதப்பும் கார் என்ன?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..
Embed widget