மேலும் அறிய

வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்

DMK BJP Anitha Radhakrishnan: திருச்சி சிவா டெல்லியில் அமைச்சராவார் என அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது, திமுக - பாஜக இடையே கூட்டணி அமைவதை குறிப்பதாக அமைந்துள்ளது.

DMK BJP Anitha Radhakrishnan: தமிழ்நாட்டில் 2029ம் ஆண்டே சட்டமன்ற தேர்தலை கொண்டு வர, பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக முயன்று வருவதாக கூறப்படுகிறது.

தவெகவை தீவிரமாக தாக்கும் திமுக:

சட்டமன்ற தேர்தல் முடிவில் தோல்வியை தழுவிய திமுக, புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள விஜய் தலைமையிலான அரசை ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறது. தனிப்பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சி, வெகுவிரைவிலேயே கவிழ்ந்துவிடும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். விரைவிலேயே தமிழ்நாட்டில் மறுதேர்தல் நடைபெறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதேநேரம், காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவை விட்டு பிரிந்து சென்றுள்ளன. இதனால், அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ள, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்து பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் தான், எதிரும் புதிருமாக உள்ள இரண்டு கட்சிகளும், கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்பது போன்று திமுக முன்னாள் அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது.

டெல்லியில் அமைச்சராகும் திருச்சி சிவா - அனிதா ராதாகிருஷ்ணன் 

திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், “நான் சொல்கிறேன், 6 மாத காலத்தில் தவெக ஆட்சி கவிழும். அடுத்த 6 மாத காலத்தில் தமிழ்நாட்டின்  முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். திமுகவை உதயநிதி ஸ்டாலின் வழி நடத்துவார். திமுக எம்.பி. திருச்சி சிவா போன்றோர் எல்லாம் டெல்லியில் அமைச்சர்களாக அமருவார்கள். அப்படி ஒரு நிலை வரும்போது நீ (விஜய்) சினிமாவில் என்ன தப்பு செய்தாய், வருமான வரித்துறையில் என்ன ஏமாற்றினாய் என அனைத்தும் வெளிவரும். நீ சம்பாதித்த பணத்தில் ஒரு பைசா ஏழைக்கு உதவி செய்த நீ எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பேசலாமா?.. எம்ஜிஆர் எப்படிப்பட்ட தலைவர்.. அவர் அண்ணாவால் பாராட்டப்பட்டு, கலைஞர் கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்டவர் அவருடன் உன்னை ஒப்பிட்டுக்கொள்ளலாமா?” என ஆவேசமாக பேசியுள்ளார்.

பாஜக கூட்டணி கன்ஃபார்ம்?

மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவின் ஆட்சி 2029ம் ஆண்டு வரை நீடிக்க உள்ளது. 2014 மற்றும் 2019ம் ஆண்டை போல், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியே ஆட்சி நடத்தி வருகிறது. இதனால் பல முக்கிய மசோதாக்களை தனிச்சையாக சட்டமாக்க முடியாமல் தடுமாறி வருகிறது. தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இன்றி தோல்வியை தழுவியது. இந்த சூழலில் மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களையும், மக்களவையில் 22 உறுப்பினர்களையும் கொண்டுள்ள திமுகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும் ஆர்வம் காட்டுகிறதாம்.

இதையும் படியுங்கள்: CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?

வழக்குகளை தொடுக்கும் தவெக

இதனால் திமுக கடுமையாக எதிர்த்த முக்கிய மசோதாக்களில் சில திருத்தங்களையும் மேற்கொள்ளவும் முன்வந்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை தோண்டி எடுக்க முதலமைச்சர் விஜய் ஆர்வமாக உள்ளாராம். அதன் மூலம் தங்களுக்கான மைலேஜை அதிகரிக்க முடியும் என நம்புகிறராம்.  இதன் விளைவாகவே அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, எ.வ. வேலு, சிவசங்கர் உள்ளிட்ட பலரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனராம். இதனால் மத்திய மற்றும் மாநில என இரண்டு ஆளுங்கட்சிகளையும் பகைத்துகொண்டால் பல சிக்கல்களை எதிர்கொள்ள கூடும் எனவும், தங்களுக்கான சாதகமான சூழல்களை உருவாக்கிக் கொள்ள பாஜக பக்கம் செல்லலாம் எனவும் அறிவாலயம் தரப்பு பரிசீலித்து வருகிறதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!
ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!
பாஜகவின் தொகுதி மறுவரையறை சதி: எதிர்க்கட்சிகள் ஒன்றுபட திருமாவளவன் அறைகூவல்!
பாஜகவின் தொகுதி மறுவரையறை சதி: எதிர்க்கட்சிகள் ஒன்றுபட திருமாவளவன் அறைகூவல்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget