மேலும் அறிய

"கொடுத்தா பாரத ரத்னா கொடுங்க எனக்கு என் ரசிகர்கள் போதும்" S ஜானகி வைரல் வீடியோ

இந்தியாவின் பழம்பெரும் பின்னணி பாடகியான எஸ்.ஜானகி நேற்று காலமான நிலையில், 2013-ல் மத்திய அரசு அவருக்கு அறிவித்த பத்ம பூஷன் விருதை அவர் துணிச்சலாக வேண்டாமென்று மறுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய இசையுலகில் கடந்த 70 வருடங்களாக தன் வசீகர குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட பின்னணி பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

மைசூரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி உட்பட 17 இந்திய மொழிகளிலும், ஜப்பான், ஜெர்மன், அரபு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.

தனது வாழ்நாளில் மொத்தமாக 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், 4 முறை தேசிய விருதுகளையும், 33 வெவ்வேறு மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

இசைத்துறையில் இவரின் பங்களிப்புக்காக இவரை கவுரவிக்கும் வகையில், 2013-ல் மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது.

ஆனால், அந்த விருதை அவர் அப்போது ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் பத்ம பூஷன் விருதை மறுத்தது குறித்து அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர், "55 வருஷமா சினிமா துறைல பாடிட்டு இருக்கேன். எத்தனையோ மொழிகளில் விதவிதமாகப் பாடியிருக்கேன்.

நேட்டிவிட்டியோடு பாடுறேன்னு எல்லோரும் பாராட்டியிருக்காங்க. உங்களைப்போல மலையாளிகள் கூட உச்சரிக்கல என்று மலையாளிகளே சொல்லியிருக்காங்க.

இந்த அளவுக்கு பாடியிருக்கேன்னா அதுக்கு எத்தனை விருது கொடுக்கணும். பாரத ரத்னா கொடுத்தா வாங்குறேன். இல்லனா வேணாம்.

எனக்கு எந்த விருது மேலயும் ஆர்வம் இல்ல. என்னோட ரசிகர்களுக்காகத் தான் நான் பாடுனேன். அரசுக்கு விருப்பம் இருந்தா எனக்கு பாரத ரத்னா கொடுக்கட்டும். இல்லனா எந்த விருதும் வேணாம்.

என்னோட ரசிகர்கள் மனசுல நான் இருக்கேன். அதைவிட பெரிய விருது எதுவும் இல்ல. இந்த அரசாங்கத்தின் மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை.

அரசாங்கம் தவறு செய்ததாக நான் நினைக்கல. ஆனால், இந்த பத்ம பூஷன் விருது வேணாம்" என்று அவர் வெளிப்படையாகக் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா வீடியோக்கள்

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
இன்னைக்கு வெளியே போறீங்களா? சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. 17 மாவட்ட மக்களே உஷார்
இன்னைக்கு வெளியே போறீங்களா? சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. 17 மாவட்ட மக்களே உஷார்
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Embed widget