மேலும் அறிய

"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள'அன்பே டயானா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

இப்படத்தில் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். விழாவில் கலந்து கொண்ட நடிகை ரோஜா, நடிகர் சேத்தன், இயக்குநர்-நடிகர் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் சசிகுமார் ஆகியோர் படத்தை வெகுவாக பாராட்டிப் பேசினர்.

"குடும்ப உறவுகளின் அழகான படம்" – ரோஜா

நடிகை ரோஜா பேசும்போது, "அன்பே டயானா' ஒரு காதல் படம் மட்டுமல்ல. குடும்ப பாசம், உறவுகள், காதல், உணர்வுகள் அனைத்தையும் சரியான விகிதத்தில் கொண்ட குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களின் மனதை தொடும். அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய படம் இது" என்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஜா, இயக்குநர் பாரி இளவழகனின் அர்ப்பணிப்பையும், ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டின் காட்சியமைப்பையும் பாராட்டினார்.

"ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைவு இருக்கிறது" – சேத்தன்

நடிகர் சேத்தன் தனது அனுபவத்தை பகிர்ந்தபோது, ஆரம்பத்தில் மீண்டும் அப்பா கதாபாத்திரம் என்பதால் தயக்கம் இருந்ததாக கூறினார். ஆனால் முழுக் கதையைக் கேட்ட பிறகு எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயாராக இருந்ததாக தெரிவித்தார்.

"இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மட்டுமல்ல, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முழுமையான பயணமும் அழகான நிறைவும் இருக்கிறது. பாரி இளவழகனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படம் இது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமுத்திரக்கனி, சசிகுமார் வாழ்த்து

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமுத்திரக்கனி, "பாரி இளவழகன் போன்ற இளம் இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு புதிய கதைகளையும் புதிய பார்வையையும் கொண்டு வருகிறார்கள். டிரெய்லரை பார்த்தபோது நல்ல குடும்பப் படம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது" என்றார்.

இயக்குநர் சசிகுமார் பேசுகையில், "ஜமா' திரைப்படம் மூலம் பாரி தனது திறமையை நிரூபித்தார். இப்போது முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக 'அன்பே டயானா'வை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லுங்கள்" என்று வாழ்த்தினார்.

ஜூலை 17-ல் வெளியாகும் 'அன்பே டயானா'

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட காதல் மற்றும் குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. டிரெய்லர் வெளியீட்டைத் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள 'அன்பே டயானா' வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget