(Source: ECI/ABP News/ABP Majha)
Rajinikanth: நன்றி மறவாத ரஜினி.. குருநாதர் பாலசந்தருக்காக செய்த சம்பவம்.. என்ன தெரியுமா?
ஏவிஎம் நிறுவனம் சிறிய இடைவெளிக்கு பிறகு ரஜினியை வைத்து முரட்டு காளை படம் எடுக்கிறார்கள்.இதற்கிடையில் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்கு ரஜினியை வைத்து படமெடுக்கலாம் என தோன்றுகிறது.
தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த குருநாதரான மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்காக ரஜினி செய்த சம்பவம் ஒன்றை இயக்குநர் கரு.பழனியப்பன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு ரஜினியை அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். அதன்பிறகு மூன்று முடிச்சு, அவர்கள், தப்புத்தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், தில்லு முல்லு என அடுத்தடுத்து கே.பாலசந்தர் படங்களில் நடித்தார். இதற்கிடையில் ரஜினியின் மார்க்கெட் வேல்யூ வேறு தளத்துக்கு சென்றது. இதனிடையே ரஜினி தன்னுடைய சினிமா கேரியரில் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்கு படங்கள் நடித்து கொடுத்துள்ளார். அதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கரு.பாலசந்தர் தெரிவித்தார்.
அதாவது, “ரஜினிகாந்த் பாலசந்தரால் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ச்சியாக பாலசந்தர் உதவி இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து தனக்கென ஒரு உயரத்தை அடைகிறார். அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகிறது. கிட்டதட்ட சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை அடைந்து விட்டார். சில காலம் படமெடுக்காமல் இருந்த ஏவிஎம் நிறுவனம் சிறிய இடைவெளிக்கு பிறகு ரஜினியை வைத்து முரட்டு காளை படம் எடுக்கிறார்கள். அவருக்கும் ஏவிஎம் நிறுவனம் மீது ஒரு மரியாதை இருக்கிறது. இதற்கிடையில் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்கு ரஜினியை வைத்து படமெடுக்கலாம் என தோன்றுகிறது. ஆனால் இப்படத்தை பாலசந்தர் எடுக்க முடியாது. காரணம் பாலசந்தர் ஸ்டைல் என்பதே வேறு. இந்த இடத்தை எல்லாம் ரஜினி கடந்து வந்து விட்டார்.
அப்போது ரஜினியை வைத்து படம் எடுக்கலாம்லிவிட்டு ஏவிஎம் நி என கவிதாலயாவில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த நடராஜன் நினைக்கிறார். உடனே பாலசந்தரிடம் சொல்றுவனத்துக்கு சென்று ரஜினிகாந்த் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என தெரிந்து கொண்டார். அட்வான்ஸ் தொகையை எடுத்துக் கொண்டு நேராக ரஜினி வீட்டுக்கு செல்கிறார். அவருக்கோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கவிதாலயா தயாரிக்கும் படத்துக்கு எஸ்.பி.முத்துராமன் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது. சம்பளம் எவ்வளவு என கேட்கிறார் நடராஜர்.
அதற்கு ரஜினி, ‘நான் வாங்கலாமா சம்பளம். அதுவும் பாலசந்தர் கம்பெனியில் இருந்து வாங்கலாமா? இந்த படத்தில் இலவசமாக நடித்து தருகிறேன்’ என சொல்லிவிட்டார். ஆனால் நடராஜனோ, ‘ஏவிஎம் நிறுவனத்தில் சம்பளம் எவ்வளவு கேட்டு வந்ததாகவும், அட்வான்ஸ் எடுத்து கொண்டால் இந்த படம் பண்ணலாம்’ என கூறி விடுகிறார். ஏன்னா, ‘வருஷா வருஷம் உங்களுக்கு மார்க்கெட்ல என்ன சம்பளமோ அதை தர்றேன். ஆனால் ஒரு படம் ஒவ்வொரு ஆண்டும் பண்ணனும்’என நிபந்தனை கூறுகிறார். அதன்பிறகு நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீ ராகவேந்திரர். வேலைக்காரன், சிவா, அண்ணாமலை, முத்து, குசேலன் உள்ளிட்ட பல படங்களை பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.