சேரனின் ‛ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 2.0’ -ஊரை சிலாகித்து ட்விட்டர் பதிவு;
சேரனின் இந்த ட்வீட் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. மற்றொருபக்கம் அரசு உள்ளாட்சி சுயாட்சி நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் போன்ற கருத்துகளும் நிலவிவருகின்றன.
அண்மையில் தனது சொந்த ஊருக்கு விசிட் அடித்த இயக்குநர் சேரன் ஊர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிலாகித்துள்ளது வைரலாகியுள்ளது. பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் சிறந்த ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநரும் நடிகருமான சேரன். இவர் மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவின் பழையூர்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். அண்மையில் தனது சொந்த ஊருக்குச் சென்று வந்த சேரன் ஊர் முன்னேறியுள்ளது குறித்து தனது ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்த சேரனின் ட்விட்டர் பதிவில், ‘எனது ஊரின் பெயர் பழையூர்ப்பட்டி.. வெள்ளலூர் நாடு. மேலூர் தாலுகாவில் இருக்கிறது..
எங்கள் கிராமங்களுக்கென்று சிறப்பான அம்சங்கள் உண்டு. எங்களுக்கான தெய்வங்கள் உண்டு.. எந்த ஊரில் வாழும் சிறுவர்களும் எங்கள் மண்ணில் புரண்டு விளையாட ஆசைப்படுவார்கள்.. மக்களின் மனதும் அதன் ஈரமுமே சான்று.என் ஊருக்கு போயிருந்தேன்.. இதுவரை விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் தனியே செல்வதற்கு சற்று பயமாக இருக்கும் சாலை தான் எங்களுக்கு... இப்போது வழிமுழுவதும் விளக்குக்கம்பங்கள் வந்துவிட்டது. அதன் காரணம் எங்கள் ஊர் பிரசிடெண்ட் தம்பி மு.இளையராஜாவின் முயற்சி. பாராட்டுகிறேன்.’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
என் ஊருக்கு போயிருந்தேன்.. இதுவரை விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் தனியே செல்வதற்கு சற்று பயமாக இருக்கும் சாலை தான் எங்களுக்கு... இப்போது வழிமுழுவதும் விளக்குக்கம்பங்கள் வந்துவிட்டது. அதன் காரணம் எங்கள் ஊர் பிரசிடெண்ட் தம்பி மு.இளையராஜாவின் முயற்சி. பாராட்டுகிறேன். pic.twitter.com/Xg9YlZaGcV
— Cheran (@directorcheran) August 9, 2021
சேரனின் இந்த ட்வீட் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. மற்றொருபக்கம் அரசு உள்ளாட்சி சுயாட்சி நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் போன்ற கருத்துகளும் நிலவிவருகின்றன.
மற்றொரு ட்விட்டர் பதிவில் தனது ஊரில் மருத்துவம் பார்க்கும் டாக்டர் குறிஞ்சி குமரன் என்பவரைப் பற்றியும் பகிர்ந்திருந்தார், 'என்னுடன் இருப்பவர் எங்கள் ஊரைச்சேர்ந்த குறிஞ்சி குமரன்.. மருத்துவ படிப்பு முடித்துவிட்டு பெரிய நகரங்களை நோக்கி ஓடாமல் 500 குடும்பங்களே இருக்கும் எங்கள் கிராமத்திலேயே மருத்துவ சேவை செய்கிறார். என் படிப்பு என் ஊருக்கு பயன்படட்டும் என நினைக்கும் பண்பு பாராட்டத்தக்கது.. பாராட்டினேன்’ என ட்வீட் செய்திருந்தார்.
என்னுடன் இருப்பவர் எங்கள் ஊரைச்சேர்ந்த குறிஞ்சி குமரன்.. மருத்துவ படிப்பு முடித்துவிட்டு பெரிய நகரங்களை நோக்கி ஓடாமல் 500 குடும்பங்களே இருக்கும் எங்கள் கிராமத்திலேயே மருத்துவ சேவை செய்கிறார். என் படிப்பு என் ஊருக்கு பயன்படட்டும் என நினைக்கும் பண்பு பாராட்டத்தக்கது.. பாராட்டினேன். pic.twitter.com/EOqCnBcnDm
— Cheran (@directorcheran) August 12, 2021
தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் சேரன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.