சூர்யாவுக்கு தெரியாமல்.. மறைஞ்சு, மறைஞ்சு பாலா செய்த காரியம் - என்ன தெரியுமா?
பிரபல இயக்குனர் நடிகர் சூர்யா முன்பு சிகரெட் பிடிப்பதை தவிர்த்து வருகிறார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் பாலா. சேது படம் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த இவர் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் என்று பல படங்களை எடுத்து தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.
சூர்யா முன்பு சிகரெட் பிடிக்காத பாலா:
நடிகர் விக்ரம், சூர்யாவின் திரை வாழ்வில் மிகவும் முக்கியமான நபராக பாலா உள்ளார். அவரின் படங்களுக்கு பிறகே இவர்கள் இருவரும் திரையில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தனர். மிகப்பெரிய இயக்குனரான பாலாவிற்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனாலும், அவர் சூர்யா முன்பு புகைபிடிக்கமாட்டார். அது ஏன்? என்பதை பாலாவே ஒரு முறை விளக்கமாக தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்?
இதுதொடர்பாக, பாலா ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, சூர்யாவிற்கு முன்பு புகைபிடிக்கமாட்டேன். ஏனென்றால் வருத்தப்படுவான். மற்றவர்கள் அனைவரும் அறிவுரை கூறுவார்கள். வருத்தப்படுவான் என்பதற்காகவே புகைப்பிடிப்பது இல்லை. இதனாலே, பெரிய மானிட்டர் வைத்துவிட்டு மானிட்டர் கீழே குனிந்து கொண்டு தெரியாமல் பார்த்துவிடக்கூடாது என்று புகைபிடிப்பேன்.
ப்ரேக் டைம்ல சென்று சூர்யா நான் குறைத்துவிட்டேன் என்றும், விட்டாச்சு தெரியுமா என்றும் சொல்வேன். இல்லண்ணா, அந்த ஷாட் எடுக்கும்போது 8 முறை சிகரெட் அடிச்சீங்க. நடித்துக் கொண்டு இருக்கும்போதே நான் எத்தனை முறை சிகரெட் பிடித்தேன் என்று நோட் பண்ணும் அக்கறை நடிகரிடம் இருக்காது. தம்பியிடம்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நந்தா, பிதாமகன்:
நடிகர் சூர்யா பாலாவின் இயக்கத்தில் நந்தா, பிதாமகன் ஆகிய 2 படங்களில் நடித்தார். பாலாவின் அவன் இவன் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். நந்தா மற்றும் பிதாமகன் இரண்டு படங்களும் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகவும், அவரது திரை வாழ்வில் அவரது நடிப்பிற்கான அடையாளமாகவும் திகழ்கிறது.
பாலா கடைசியாக இயக்கிய வணங்கான் படத்தில் கதாநாயகனாக நடிக்க முதன்முதலில் ஒப்பந்தமானவர் சூர்யா. படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் ஆன பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து சூர்யா விலகினார். பின்னர், அவருக்கு பதிலாக அந்த படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்தார். அந்த படம் சுமாரான வெற்றியே பெற்றது.





















