அந்த பெயரை சொல்லி வச்சு செஞ்சுட்டாங்க.. மணிகண்டன் சொன்னா நான் ரெடி.. அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்
டிராகன் படம் வெளியான பிறகு எங்கே போனாலும் அந்த பெயரை சொல்லி வச்சு செஞ்சுட்டாங்க என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

சினிமா விமர்சகரும், திரை பிரபலங்களை பேட்டி எடுப்பதன் மூலம் பிரபலம் அடைந்தவர் பரத்வாஜ் ரங்கன். திரை பிரபலங்களும் தேவையற்ற கேள்விகளை தாண்டி ஜெனியூனாக நடந்துகொள்பவர்களில் ஒருவராக திகழ்கிறார். திரை பிரபலங்களுக்கு பிடித்த நபராகவும் இருக்கிறார். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலில் பரத்வாஜ் ரங்கன் நடிகர் மணிகண்டன், இயக்குநர்கள் அருண்குமார், அஸ்வத் மாரிமுத்து, நடிகை கீதா கைலாசம், டூரிஸ்ட் ஃபேமிலி தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோருடன் உரையாடலை நிகழ்த்தினார். இதில், பல சுவாரஸ்யமான பதில்களும், கேள்விகளையும் இங்கு காணலாம்.
கண்களை பெரிசாக உருட்டி காட்டும் மிஷ்கின்
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் இயக்குநர் மிஷ்கினை நடிக்க வைத்தது குறித்து பரத்வாஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அஸ்வத் மாரிமுத்து, மிஷ்கின் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட இண்டர்வியூ நிறைய பார்ப்பேன். இந்த படத்தில் அவர் தான் வேண்டும் முடிவு செய்தேன். ஆனால், அவர் கண்களை உருட்டி பெரிசாக காட்டக்கூடிய மிஷ்கினாக டிராகனில் தெரியக்கூடாது. ஒரு கல்லூரி முதல்வராகவும், நம்ம கூட மிக சாதாரணமா எளிமையாக பேசி பழகுற மாதிரி இருக்கனும். அதே நேரத்தில் ஒரு கண்டிப்பான ஆசிரியர், தந்தை எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் அவரை நடிக்க வைத்தேன். அவர் எனக்கு பயங்கரமா சப்போர்ட் பண்ணாரு. இந்த படத்தில் அவரோட நடிப்பும் பாராட்டை பெற்றது என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்தார்.
யூகி சேது சார் போன் பண்ணாங்க
மேலும் பேசிய அவர், டிராகன் படத்துல மிஷ்கின் சாரை பார்த்தா கெட்டவர் மாதிரி தெரியும். ஆனால், பிரதீப் தான் திருட்டு வேலை செய்து நல்ல சம்பளம் வாங்குவான். அவனை திருத்துவதற்காக இதை செய்வார். ஒரு கட்டத்தில் கல்லூரி முதல்வராக யோசித்து, என்னாலதான் அவன் லைஃப் இப்படி ஆகிடுச்சு ஒரு பீல் ஆவாரு அது ரொம்ப பிடித்திருந்தது. டிராகனை பார்த்துட்டு யூகி சேது சார் போன் பண்ணி ஏன் பா எனக்கு இந்த மாதிரி ஒரு கதாப்பாத்திரம் ஏன் கொடுக்க மாட்டேங்குற என அன்போடு கேட்டுக்கொண்டார். அதே மாதிரி ஜார்ஜ் மரியனும் அப்படித்தான் இருந்தது என அஸ்வத் கூறினார்.
வர்ஷினி பேரை சொல்லி சாவடிக்குறாங்க
நடிகர் மணிகண்டன், அஸ்வத் மாரிமுத்து, அருண்குமார் மூவருமே நாளைய இயக்குநர் நிகழ்ச்சிகளில் இருந்தே நல்ல பழ்ககம் கொண்டவர்களாக இருக்கின்றனர். நிகழ்ச்சியின் நடுவே நடிகர் மணிகண்டன் அஸ்வத் சூப்பரா நடிப்பாரு என்று தெரிவிக்க, அதற்கு நீங்க படம் இயக்கினால் ஓளவையார் வேடம் கூட போட ரெடியா இருக்கேன் என அஸ்வத் ஜாலியாக பதிலளித்தார். மேலும், பேசிய அஸ்வத் மாரிமுத்து, நான் ஒருமுறை நடிச்சதுக்கே இந்த பாடு படுத்துறாங்க. இப்பவரைக்கு நான் எங்கே போனாலும் வர்ஷினி எங்க. வர்ஷினி என்று கேள்வி கேட்டு சாவடிக்குறாங்க. என்னை வச்சு செஞ்சுட்டாங்க என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்தார். அப்போது இயக்குநர் அருண்குமாரும், மணிகண்டனும் விழுந்து விழுந்து சிரித்தனர்.





















