மேலும் அறிய

Vanangaan latest update: பாலாவுடனான பிரச்னை.. வணங்கான் கதையில் மாற்றம்.. கூட்டணி சேரும் அருவிபட இயக்குநர்!

நடிகர் சூர்யா - இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் 'வணங்கான்' படத்தின் கதை மாற்றப்பட உள்ளது. மேலும் இந்த கூட்டணியில் இணைய உள்ளார் 'அருவி' திரைப்படம் மூலம் பிரபலமான இயக்குநர் அருண் புருஷோத்தமன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 42' திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு பறக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இலங்கையின் வனப்பகுதிகளில் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 

வணங்கான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

இதை தவிர நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பில் மும்மரமாக நடித்து வந்தார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யாவின் ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்து வந்த 'வணங்கான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 40 நாட்களாக படப்பிடிப்பு  நடைபெற்று வந்தது. இருப்பினும் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு இடையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

Vanangaan latest update: பாலாவுடனான பிரச்னை.. வணங்கான் கதையில் மாற்றம்.. கூட்டணி சேரும் அருவிபட இயக்குநர்!

புதிதாக இணையும் 'அருவி' இயக்குனர் :

அந்த வகையில் படத்தின் ஹீரோ சூர்யாவுடன் கலந்து ஆலோசித்த பிறகு, படத்தின் கதையை முற்றிலுமாக மாற்றி புதிய கதையை உருவாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பாலா. மேலும் புதிய தகவலாக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குனர் பாலாவுடன் இணைந்து இப்படத்தில் பணியாற்ற உள்ளார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் 2017ம் ஆண்டு அதிதி பாலன் நடிப்பில் வெளியான 'அருவி' திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அருவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் 'வணங்கான்' திரைப்படம் மூலம் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி சேரவுள்ளார். 

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :

'வணங்கான்' படத்தின் மாற்றப்பட்ட புதிய கதைக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தயாரிக்கும் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலையும் இதுவரையில் வெளியிடவில்லை. வணங்கான் படம் குறித்த அப்டேட் எதுவும் சமீப காலமாக வெளியாகாமல் இருந்ததால் இயக்குனர் மற்றும் நடிகர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதனால் தான் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டதாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டன. ஆனால் அந்த வதந்தி உண்மையில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து 'வணங்கான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூர்யா - பாலா கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய படங்களின் வெற்றியால் வணங்கானுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  
   
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்ணியம் முக்கியம்; நீங்கள் ரசிகர்கள் அல்ல – தவெக ஐடி விங் கூட்டத்தில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
கண்ணியம் முக்கியம்; நீங்கள் ரசிகர்கள் அல்ல – தவெக ஐடி விங் கூட்டத்தில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
India Vs China: நீ ஒண்ணும் அவ்ளோ நல்லவன் இல்லையே.? இந்தியாவிற்கு உதவ தயார் என சீனா அறிவிப்பு... எதற்கு.?
நீ ஒண்ணும் அவ்ளோ நல்லவன் இல்லையே.? இந்தியாவிற்கு உதவ தயார் என சீனா அறிவிப்பு... எதற்கு.?
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல் – வைகோ அதிர்ச்சி
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல் – வைகோ அதிர்ச்சி
Chennai AC Train: தொடங்கிய குளுகுளு பயணம்.. சென்னையின் முதல் ஏசி ரயில் எங்கெங்கு நிற்கும்.. கட்டண விவரம் தெரியுமா.?
தொடங்கிய குளுகுளு பயணம்.. சென்னையின் முதல் ஏசி ரயில் எங்கெங்கு நிற்கும்.. கட்டண விவரம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்ரீ-யின் நிலைமை என்ன? உதவிக்கு வந்த லோகேஷ்! வெளியான முக்கிய அறிக்கை”வாய முடிட்டு இருங்க” முகத்துக்கு நேர் கேட்ட ஸ்டாலின்! வாயடைத்து போன அமைச்சர்கள்MK Stalin warnBJP ADMK Alliance: 100 தொகுதி வேணும்.. ஆட்டம் காட்டும் அண்ணாமலை! குழப்பத்தில் இபிஎஸ் | EPS | TNADMK BJP Alliance: ”வருங்கால முதல்வரே” காலரை தூக்கும் நயினார் நாகேந்திரன்! எடப்பாடியை சீண்டும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்ணியம் முக்கியம்; நீங்கள் ரசிகர்கள் அல்ல – தவெக ஐடி விங் கூட்டத்தில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
கண்ணியம் முக்கியம்; நீங்கள் ரசிகர்கள் அல்ல – தவெக ஐடி விங் கூட்டத்தில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
India Vs China: நீ ஒண்ணும் அவ்ளோ நல்லவன் இல்லையே.? இந்தியாவிற்கு உதவ தயார் என சீனா அறிவிப்பு... எதற்கு.?
நீ ஒண்ணும் அவ்ளோ நல்லவன் இல்லையே.? இந்தியாவிற்கு உதவ தயார் என சீனா அறிவிப்பு... எதற்கு.?
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல் – வைகோ அதிர்ச்சி
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல் – வைகோ அதிர்ச்சி
Chennai AC Train: தொடங்கிய குளுகுளு பயணம்.. சென்னையின் முதல் ஏசி ரயில் எங்கெங்கு நிற்கும்.. கட்டண விவரம் தெரியுமா.?
தொடங்கிய குளுகுளு பயணம்.. சென்னையின் முதல் ஏசி ரயில் எங்கெங்கு நிற்கும்.. கட்டண விவரம் தெரியுமா.?
Thoothukudi: தூத்துக்குடிக்கு இந்த நிலையா..! பற்றாக்குறை, 40,000 டன் உப்பு இறக்குமதி - வரலாறே இல்லையே..!
Thoothukudi: தூத்துக்குடிக்கு இந்த நிலையா..! பற்றாக்குறை, 40,000 டன் உப்பு இறக்குமதி - வரலாறே இல்லையே..!
Summer Destinations: கருணையின்றி சுட்டெரிக்கும் சூரியன்.. தப்பிக்கணுமா? உங்களுக்கான தரமான ஆப்ஷன்கள்
Summer Destinations: கருணையின்றி சுட்டெரிக்கும் சூரியன்.. தப்பிக்கணுமா? உங்களுக்கான தரமான ஆப்ஷன்கள்
Retro Surya: சும்மா இருங்க டாடி..! வாய்விட்ட சிவக்குமார், சூர்யாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்.. அடங்கமாட்டீங்களா?
Retro Surya: சும்மா இருங்க டாடி..! வாய்விட்ட சிவக்குமார், சூர்யாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்.. அடங்கமாட்டீங்களா?
CSK: பிளே ஆஃப் செல்லுமா மஞ்சள் படை.. காத்திருக்கும் சவால்கள் என்னென்ன? முழு விவரம்
CSK: பிளே ஆஃப் செல்லுமா மஞ்சள் படை.. காத்திருக்கும் சவால்கள் என்னென்ன? முழு விவரம்
Embed widget