மேலும் அறிய

Director Ameer: திருடிய திருடனே நீதிமன்றம் போக முடியாது: ஞானவேல்ராஜா மீது சீறும் அமீர்!

”பொய்யான ஒருவர் நீதிமன்றத்தை அணுக முடியாது. திருடிய திருடனே நீதிமன்றம் போக முடியாது. பறிக்கொடுத்தவன் தான் நீதிமன்றம் செல்ல முடியும்” ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமீர்.

Director Ameer: தயாரிப்பாளார் ஞானவேல் ராஜா பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதாக இயக்குநர் அமீர் பதிலடி கொடுத்துள்ளார். 
 
2007ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்தி வீரன் நல்ல வரவேற்பை பெற்றது. முதன் முதலாக ஹீரோவாக  அறிமுகமான பருத்தி வீரன், கார்த்தியின் கெரியரையே மற்றி எழுதியது. கிராமத்து கதைகளத்தில் உருவான பருத்தி வீரன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமாக உள்ளது. படத்தை அமீர் இயக்க, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். பருத்தி வீரன் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் சர்ச்சை இன்றும் நீடித்து வருகிறது. 
 
பருத்தி வீரன் படத்தில் தனக்கு ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும், படத்துக்காக தான் கடனில் சிக்கி கொண்டதாகவும் அமீர் கூறியிருந்தார். அமீரின் இந்த பேச்சுக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் தன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்வதாகவும், அமீர் இயக்குநராக அறிமுகமானதில் இருந்து ரொம்பவே மாறிவிட்டதாகவும் கூறி இருந்தார். மேலும், தன்னிடம் அமீர் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு அதை திருப்பி கொடுக்கவில்லை என்ற ஞானவேல் ராஜா, பருத்தி வீரன் படத்தில் ஃபர்ஸ் காப்பியை ரூ.2.75 கோடி பட்ஜெட்டில் தருவதாக கூறிவிட்டு, 2 ஆண்டுகளில் ரூ.4 கோடி வரை செலவு செய்து படத்தை எடுத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், திரையில் வராத பன்றிகளுக்கு அமீர் கணக்கு காட்டியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விமர்சித்திருந்தார். 
 
இந்த நிலையில் ஞானவேல் ராஜாவின் இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் அமீர் பதிலடி கொடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்துள்ள அமீர், ”பொய்யான ஒருவர் நீதிமன்றத்தை அணுக முடியாது. திருடிய திருடனே நீதிமன்றம் போக முடியாது. பறிக்கொடுத்தவன் தான் நீதிமன்றம் செல்ல முடியும். அவர்கள் பொய்களையும், அவதூறுகளையும் அள்ளிவீசுகிறார்கள். அவர்களிடம் நேர்மையும், அறமும் இல்லை. ஒருவரது கேரக்டர் வைத்து பேசுவதையே அவர்கள் செய்து வருகின்றனர்.  பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் தான் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு இருவருக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட ஒப்பந்தந்தத்திற்கு அவர்கள் மதிப்பு அளிக்கவில்லை” என்றார். 
 
இப்படி அமீர் மற்றும் ஞானவேல் ராஜா மாறி, மாறி ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்வதால் தமிழ் திரையுலகில் சர்ச்சையாகியுள்ளது. சூர்யாவின் உறவினரான ஞானவேல் ராஜாவுடன் ஏற்பட்ட மோதலால், சிவக்குமார் மற்றும் சூர்யாவுடனான நட்பிலும் அமீருக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஜப்பான் படத்தின் விழாவில் கூட தன்னை அழைக்கவில்லை என்று அமீர் பேசியிருந்தார். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget