மேலும் அறிய

Director Ameer: “எதுக்கு சின்ன பட்ஜெட் படங்களை தியேட்டர்களுக்கு கொடுக்கணும்? மாத்தி யோசிங்க” -இயக்குநர் அமீர் தரும் ஐடியா!

சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் வியாபார தளத்தை மாற்றி படத்தை வெளியிட வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 

சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் வியாபார தளத்தை மாற்றி படத்தை வெளியிட வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 

சிறு பட்ஜெட் படங்கள்:

சமீபத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில் பேசிய போது, “ரூ.1 கோடி முதல் ரூ.4 கோடி வரை பட்ஜெட் வைத்துக் கொண்டு படம் எடுக்க வராதீர்கள். ஏற்கனவே 120 சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகாமல் உள்ளது. எனவே 2 ஆண்டுகளுக்கு வந்து விடாதீர்கள்” என தெரிவித்திருந்தார். அந்த கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியது. விஷாலுக்கு திரைத்துறையில் இருக்கும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே லியோ போன்ற பெரிய படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கொடுப்பது பற்றியும், சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காதது பற்றியும் இயக்குநர் அமீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

வியாபார தளம்:

அதற்கு, “எதுக்கு சின்ன படங்களுக்கு தியேட்டர் கொடுக்க வேண்டும் என கேள்வி கேட்க வேண்டும். சினிமா ஒரு வர்த்தகம். பணம் போட்டால் லாபம் சம்பாதிக்கலாம் என தயாரிப்பாளர் வர்றாரு. படம் போட்டா கேண்டீன் ஓடுமா, கரண்ட் பில், வாடகை கட்ட முடியுமான்னு தியேட்டர்காரரு பார்ப்பாரு. அதுவும் ஒரு வியாபாரம் தான். எந்த பொருளை சந்தையில் வைத்தால் வியாபாரம் ஆகுமோ அதைத்தான் தேர்வு செய்வார்கள். இதில் சிறு படம், பெரிய படம் என பிரித்து பார்க்க வேண்டியது இல்லை.

இது எல்லா காலக்கட்டத்திலேயும் நடந்துகிட்டு தான் இருக்குது. நான் நாளைக்கு சின்ன படம் எடுத்துட்டு தியேட்டர்கள் கொடுக்கவில்லை என்றால் உரிமையாளர்கள் மீது கோபம் கொள்ள முடியுமா?. நான் பலமுறை சொல்லியிருப்பது போல கடலில் தான் மீன் பிடிக்கிறோம். ஆனால் எல்லா மீனும் ஷோரூம்களுக்கா செல்கிறது. ரோட்டுக்கும் வருகிறது அல்லவா.  அப்ப மீனை பிடித்து விற்கும் இடத்தை தான் நாம் மாற்ற வேண்டும். 

தைரியம் வேண்டும்:

திரும்ப திரும்ப நீங்க தயாரிக்கும் சின்ன படத்தை தியேட்டருக்கு கொண்டு செல்வீர்கள் என்றால் எப்படி?. ஒரு சின்ன படத்தை மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரூ.190 கொடுத்து டிக்கெட் வாங்கி யார் பார்ப்பார்கள். அப்ப சந்தையை மாற்ற வேண்டும். அந்த புரிதல் இருந்தால் தான் தயாரிப்புக்கு வர வேண்டும். நானும் 2 படங்கள் தயாரித்து வைத்துள்ளேன். என்னைக்காவது தியேட்டர் தரவில்லை என்று குறை சொல்றனா?.. எனக்கு தெரியும் அந்த படங்களின் மதிப்பீடு என்ன, அதை எங்க சென்று கொடுக்க வேண்டும் என்று தெரியும். தியேட்டர் கிடைக்கலைன்னா ஓடிடியில் ரிலீஸ் பண்ணுவேன். அதுவும் இல்லையா யூட்யூபில் ரிலீஸ் பண்ணுவேன். அந்த தைரியம் இருந்தா தான் தயாரிக்க வர வேண்டும். நான் ஒரு படத்தை தயாரித்து விட்டு இவங்க எனக்கு தியேட்டர் தரவில்லை என சொல்வது நியாயமில்லை. 

விஷால் தன்னுடைய கருத்தை அதிகாரத்தில் சொன்னாரா? அக்கறையில் சொன்னாரா? என்பதை தான் பார்க்க வேண்டும். அவரது கருத்து தவறான நோக்கம் என நான் சொல்லவில்லை. சொன்ன விதம் தவறாக இருக்கலாம். யாரையும் படம் எடுக்க வாங்க, வராதீங்கன்னு சொல்ற உரிமை யாருக்கும் கிடையாது” என அமீர் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Embed widget