Watch Video : ரசிகர்களுடன் FDFS பார்க்க வந்த் ஆதிக்..பரீட்சை எழுதிய மாணவன் போல் பதட்டம்...
குட் பேட் அக்லி திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சென்னை ரோகிணி திரையரங்கிற்கு சென்றுள்ளார்

குட் பேட் அக்லி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகிள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். த்ரிஷா , அர்ஜூன் தாஸ் , பிரசன்னா , யோகி பாபு , சிம்ரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கும் தமிழ்நாட்டில் தொடங்க இருக்கிறது. இப்படியான நிலையில் படத்தை ரசிகர்களுடன் கொண்டாட படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார்
FDFS பார்க்க வந்த் ஆதிக்
திரையரங்கிற்கு வந்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. வந்ததும் ஏற்கனவே அங்கிருந்த அஜித்தின் மேளாலர் சுரேஷ் சந்திராவை கட்டித் தழுவினார் ஆதிக். அஜித்தை இயக்க வேண்டும் என்பது ஆதிக்கின் பல நாள் ஆசையாக இருந்து வந்த நிலைய்ல் இன்று அவர் இயக்கிய அஜித் படம் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Thalaivarea 😎😎#GoodBadUgly #GoodBadUglyFromApril10 pic.twitter.com/UR8E1CA2Z2
— Viralvibes (@Viralvibes71984) April 10, 2025
குட் பேட் அக்லி விமர்சனம்
குட் பேட் அக்லி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை ஆதிக் கொடுத்திருப்பதாகவும் ஆனால் கதை ரீதியாக கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் விஜய் ரசிகர்களுக்கு தி கோட் படம் அமைந்தது போலவே அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி படம் என கொண்டாடி வருகிறார்கள்





















