Adhik Ravichandran: நடிகர் பிரபு மகளை கரம் பிடித்த “மார்க் ஆண்டனி” இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.. குவியும் வாழ்த்து..!
Adhik Ravichandran Aishwarya Marriage: தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Adhik Ravichandran Aishwarya Prabhu Marriage: தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் மேஜர் ரவியிடம் உதவி இயக்குநராக இருந்து 2015 ஆம் ஆண்டு வெளியான “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த படம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இளைஞர்கள் மத்தியில் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபலமானார். தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ , பிரபுதேவாவை வைத்து ‘பஹீரா’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் சமீபத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா ஆகியோர் நடித்து பெரும் வெற்றி பெற்ற “மார்க் ஆண்டனி” படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு பாடலை பாடி பாடகராகவும் எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து நடிகராக கே 13, நேர்கொண்ட பார்வை, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணம் இன்று (டிசம்பர் 15) இனிதே நடைபெற்றது.
💐 @Adhikravi #AdhikRavichandran - Actor Prabhu Daughter #Aishwarya wedding 💐 pic.twitter.com/f56DO7coVT
— Prakash Mahadevan (@PrakashMahadev) December 15, 2023
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமாகிய ஐஸ்வர்யாவை தான் ஆதிக் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் நடிகர் விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த இணையவாசிகள் புதுமண ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.