மேலும் அறிய

செட்டுக்கு வரது லேட்..எல்லாமே சிஜி..சிகந்தர் பட தோல்விக்கு சல்மான் கான் மீது பழிபோட்ட ஏ.ஆர். முருகதாஸ்

இந்தியில் சல்மான் கானை வைத்து சிகந்தர் படத்தை இயக்கியதில் தான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி ஏ.ஆர் முருகதாஸ் பகிர்ந்துகொண்டுள்ளார்

சிகந்தர் தோல்வி குறித்து ஏ ஆர் முருகதாஸ்

தர்பார் படத்திற்கு பின் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் மதராஸி. சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ளது.  ருக்மினி வசந்த் , பிஜூ மேனன் , விக்ராந்த் , வித்யுத் ஜம்வால் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.  வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழில் 4 ஆண்டுகளாக ஃபீல்டில் இல்லாவிட்டாலும் இந்தியில் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் சல்மான் கானின் சிகந்தர் படம் வெளியானது. இந்த படத்தில் தோல்விகுறித்து மதராஸி ப்ரோமோஷன்களில் முருகதாஸ் பேசியுள்ளார். குறிப்பாக படத்தின் தோல்விக்கு தான் காரணம் இல்லை என்றும் படத்தின் நாயகன் சல்மான் கான் உட்பட பல்வேறு விஷயங்கள் படப்பிடிப்பில் மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்

சல்மான் கான் உடன் பணியாற்றுவது கஷ்டம் 

" சிகந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிக நெருக்கமான கதை. ஆனால் பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணும்போது நம்மால் 100 சதவீதம் கதைக்கு நேர்மையாக இருக்க முடியாது. குறிப்பாக சல்மான் கானை வைத்து படம் எடுப்பது என்பது எளிதானது இல்லை. அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்ததால்  அவர் பகலில் படப்பிடிப்புக்கு வர மாட்டார். இதனால் பகல் காட்சிகளை எல்லாம் இரவில் செட் போட்டு எடுக்க வேண்டிய கட்டாயம். இரண்டு குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும் காட்சியை இரவு 2 மணிக்கு எடுத்தோம் . அதை எடுக்கும் போது அவர்கள் களைப்படைந்து தூங்கிவிட்டார்கள். படப்பிடிப்பு தொடங்குவது இரவு 8 மணி. எல்லா காட்சிகளும் கிராஃபிக்ஸ் , செட்டிற்கு சல்மான் கான் வருவதும் லேட். இப்படி பல விஷயங்கள் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தன. நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் " என ஏ.ஆர் முருகதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகந்தர் படத்தின் தோல்விக்கு சல்மான் கான் காரணம் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் சல்மான் கான் ரசிகர்கள் முருகதாஸின் சுமாரான கதையும் இயக்கமும் தான் சிகந்தர் படத்தின் தோல்விக்கு காரணம் என்றும் படம் தோல்வி அடைந்தபின் பழி போடுவது முருகதாஸின் வழக்கம் என்றும் விமர்சித்து வருகிறார்கள்

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget