HBD Pandiraj: இயக்குனர் பாண்டிராஜ் தந்த டாப் 5 ‛மயிலாஞ்சி’ பாடல்கள் இதோ...!

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் பாண்டிராஜ் காதல், பாசம், சோகம் என பல மறக்க முடியாத பாடல்களை பெற்றவர். அவரது பிறந்த நாளில் மறக்க முடியாத அந்த பாடல்களை பட்டியலிடுகிறோம்.

டெல்டா வாசி என்பதால் இயக்குனர் பாண்டிராஜ், தன்னுடைய படைப்புகளில் பாடல்களில் டெல்டா வாசம் இருப்பதை எப்போதும் உறுதி செய்வார். அவரது படத்தின் காட்சிகளும் டெல்டாவையே வலம் வரும். பாடல்களில் டெல்டா வாசம் வீசும். வரிகளில் டெல்டா வழிந்தோடும். அவரது 45வது பிறந்த நாளில் பாண்டிராஜ் படங்களின் அருமையான டெல்டா மண் வீசும் டாப் 5 பாடல்கள் இதோ! HBD Pandiraj: இயக்குனர் பாண்டிராஜ் தந்த  டாப் 5 ‛மயிலாஞ்சி’ பாடல்கள் இதோ...!

1.ஒரு வெட்கம் வருதே வருதே...

‛‛மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்
கூறு போட்டு கொல்லும் இன்பம்
பர பர பரவெனவே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே...’’

தாமரை வரிகளில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இந்த பாடல்கள் எப்போதும் மழை விழும் ரகம். 2.மருதாணி பூவப்போல...‛‛தட்டி தட்டி நெஞ்சத்துறக்குற

எட்டி எட்டி உள்ள குதிக்கிற

வெட்டி வெட்டி வேலைவெட்டி மம்முட்டிய எடுக்குற

நெத்திப்போட்டு மத்தியில சுத்திவச்சி அடிக்கிற

இம்புட்டையும் பண்ணிப்புட்டு நல்லவளா நடிக்கிறமருதாணி பூவே...’’

தாஜ்நூர் இசையில் மண்வாசனை மாறாமல் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பாடலை கேட்டால், அந்த கிராமப்பின்னணியில் நுழைந்த உணர்வை தரும். 3.தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...

‛‛கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் உன் முகம்.
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் உன் முகம்.
அம்பாரியாய் ஏற்றிக்கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்.
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்.
வளர்ந்தவுமே யாவரும்
தீவாய் போகிறோம்.
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்.
நமக்கெனவே
வந்த நண்பன் தந்தை..’’

தந்தையின் மகிமை போற்றிய பாடல். கேடி பில்லா கில்லாடி ரங்காவில் தோன்றிய இந்த பாடல், இன்றும் பல மகன்களின் காலர் டியூன். டெல்டா வாசம்... ஃபிரேம் பை ஃபிரேம் வீசும் ‛நம்ம வீட்டு பிள்ளை’ பாண்டிராஜ்!

4.தண்டோரா கண்ணால...

‛‛பொட்டு வெச்ச பொண்ணு
சுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு
வட்டம் கட்டி நின்னு
கும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு
கிழற்பாலதானே வரும் சூரியன்
என நானும் கூட நினச்சேன்
ஏகாதலும் பேசும் மகராசி உன் முகம்
பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னவோ போடி உன்னையெதடி
ரெக்கை முளைக்குதடி
நெஞ்சு பரகித்தடி...’’

டி.இமான் இசையில் யுகபாரதி எழுதிய இந்த பாடல் கடைக்குட்டி சிங்கம் படத்தில் காட்சிப்படுத்தியதிலும் கண்ணுக்கு இனிமை!

 5.மயிலாஞ்சி... மயிலாஞ்சி...

‛‛கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்

கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்

சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்...’’

டி.இமான் இசையில் யுகபாரதி எழுதி மயிலாஞ்சி... அனைத்து தரப்பினரும் கொண்டாடிய பாடல்! இசை அமுது!பசங்க To நம்ம வீட்டு பிள்ளை... பாண்டிராஜ் ஸ்பெஷல் ஆல்பம்!

இன்னும் பல மண்வாசனை மாறாத பல பாடல்கள் பாண்டிராஜ் படைப்பில் இருக்கும். அடுத்த பிறந்தநாளில் இன்னும் பல பாடல்களை வரிசைப்படுத்துவோம் 

Tags: Pandiraj hbd pandiraj director pandiraj mailanchi pandiraj hits imman hits

தொடர்புடைய செய்திகள்

HBD Pandiraj: டெல்டா வாசம்... ஃபிரேம் பை ஃபிரேம் வீசும் ‛நம்ம வீட்டு பிள்ளை’ பாண்டிராஜ்!

HBD Pandiraj: டெல்டா வாசம்... ஃபிரேம் பை ஃபிரேம் வீசும் ‛நம்ம வீட்டு பிள்ளை’ பாண்டிராஜ்!

Ar Rahman song | இன்றைய இரவைக் கொஞ்சம் இலகுவாக்கும் ரஹ்மான் ஹிட்ஸ்

Ar Rahman song | இன்றைய இரவைக் கொஞ்சம் இலகுவாக்கும் ரஹ்மான் ஹிட்ஸ்

Cancer Survivor day : கேன்சர் என் வாழ்க்கையின் போக்கை முடிவுசெய்ய விடமாட்டேன் – சோனாலி பெந்த்ரே

Cancer Survivor day : கேன்சர் என் வாழ்க்கையின் போக்கை முடிவுசெய்ய விடமாட்டேன் – சோனாலி பெந்த்ரே

Corona Relief | சாஹோ தீமை வைத்து கொரோனா நிவாரண நிதி திரட்டும் இசையமைப்பாளர் ஜிப்ரான் !

Corona Relief | சாஹோ தீமை வைத்து கொரோனா நிவாரண நிதி திரட்டும் இசையமைப்பாளர் ஜிப்ரான் !

'எனது வாழ்க்கையை புரட்டிப்போட்ட திரைப்படம்' : மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

'எனது வாழ்க்கையை புரட்டிப்போட்ட திரைப்படம்' : மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு