Venky Atluri: "இட ஒதுக்கீட்டை ஒழிப்பேன்.." - வாத்தி இயக்குனர் வெங்கி சர்ச்சை பேட்டி..! குவியும் கண்டனங்கள்
வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி இட ஒதுக்கீடு குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படம் இன்று ரிலீசாகியுள்ளது. தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.
இடஒதுக்கீடு:
இவர் படத்தின் ப்ரமோஷனுக்காக பத்திரிகையாளர் ஒருவருக்கு வெங்கி அட்லுரி அளித்துள்ள பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவர் கூறியிருப்பதாவது, “ நான் மட்டும் மத்திய கல்வி அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை நீக்கிவிடுவேன். இட ஒதுக்கீடு என்பது கண்டிப்பாக பொருளாதார அடிப்படையில்தான் இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
வெங்கி அட்லுரியின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர்வாசிகள் பலரும் வெங்கி அட்லுரியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு ட்விட்டர்வாசி கல்வி அடிப்படை குறித்து படம் எடுப்பதற்கு முன்பாக, நீங்கள் முதலில் அறிவை வளரத்துக்கொள்ளுங்கள், சென்று அம்பேத்கரை படியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
#SIRMovie
— Kaushik (@partofdproblem) February 17, 2023
Education system midha cinema teeyadam kadu sir ,miku first education avasaram ,go read Ambedkar. pic.twitter.com/F6gQv4XOG0
குவியும் கண்டனங்கள்:
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 10 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற பலரின் கருத்துக்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் வேளையில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரியின் இந்த கருத்து அவருக்கு அதிகளவு விமர்சனத்தையும், கண்டனத்தையும் குவித்து வருகிறது.
வாத்தி படத்தில் கல்வி தொடர்பான பிரச்சினைகளை பேசும் சூழலில், அதன் இயக்குனர் வெங்கி அட்லுரி இதுபோன்ற கருத்தை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்து படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். வாத்தி படத்தில் தனுசுடன் சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகர், இயக்குனர்:
நடிகர் மற்றும் இயக்குனரான வெங்கி அட்லுரி 2010ம் ஆண்டு சினேக கீதம் என்ற படத்தின் வசனகர்த்தாவாக அறிமுகமானார். அந்த படத்தில் நடிக்கவும் செய்தார். 2018ம் ஆண்டு தோழி ப்ரேமா என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்டர் மஞ்சு, ரங்தே என்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது வாத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
வாத்தி படத்திற்கு போட்டியாக தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள பகாசூரன் படமும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:Vaathi Review: வாத்திக்கு விசில் போடலாமா? விளாசித் தள்ளலாமா? - ஃபர்ஸ்ட் கிளாஸ் ரிவ்யூ இதோ....!
மேலும் படிக்க: Bakasuran Twitter Review: மோகன் ஜியின் வழக்கமான படமா... இல்லை புது பாணி படமா... பகாசூரன் ட்விட்டர் விமர்சனம் இதோ!