Watch Video: வெளியானது 'தி கிரே மேன்' படத்தில் தனுஷின் படப்பிடிப்பு காட்சிகள்!
The Gray Man Behind The Scenes: தி கிரே மேன் படத்தில் தனுஷின் படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.
’தி கிரே மேன்’ (The Gray Man) திடைப்படத்தில் ஆவிக் சான் (Avik San) கதாபாத்திரத்தில் நடித்த தனுஷின் (Dhanush) படப்பிடிப்பு காட்சிகளை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹாலிவுட்டில் 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பிரபல ஆக்சன் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ’தி க்ரே மேன்’ (The Gray Man) படம் வரும் ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரயான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்தது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.
பரபரப்பான சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படமாக இப்படம் வெளிவந்துள்ள நிலையில், கலவையான விமர்சனங்கள் படத்துக்கு வந்தது. இந்தப் படம் மூலம் நடிகர் தனூஷ் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆனது அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது.
We also want to give flowers to our sexy Tamil friend 😭❤️
— Netflix India (@NetflixIndia) July 27, 2022
Here's a glimpse of @dhanushkraja behind the scenes of The Gray Man 😍 pic.twitter.com/ie9SGFe5bb
தற்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நடிகர் தனுஷின் இறுதிநாள் படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த விடீயோவில் தனுஷ் அதிரடி சண்டை காட்சிகளை திறம்பட நடித்துள்ளதை குறிபிட்டுள்ளது. மேலும், இறுதிநாள் படப்படிப்பின்போது, அவரை வழியனுப்பும் விதமாக அவருக்கு அழகான பெரிய பூங்கொத்து கொடுக்கப்பட்டதையும் அவர்கள் வெளியிட்டுள்ள விடீயோவில் இடம்பெற்றுள்ளது.
Watch the full video 👇
— Netflix India (@NetflixIndia) July 27, 2022
https://t.co/ZSUKl6bKfZ
இதை ரசிர்கள் கொண்டாடி வருகின்றன. திறமையான நடிகர் தனுஷ் என்றும் அவருக்கு புகழும் பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் தனுஷ் எந்த கேரக்டர் என்றாலும் அதற்கான மெனக்கெடல் செய்வார் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்