மேலும் அறிய

திண்டாடும் திரையரங்குகள்...ஒரே படத்தை மீண்டும் மீண்டும் வெளியிட வேண்டிய கட்டாயம்

3 Rerelease : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது

ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு  குறிப்பிட்ட திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆன 3 திரைப்படம் மறுபடியும் காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பழைய படங்கள் ரீரிலீஸில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் புதிய படங்கள் எதுவும் இல்லாத கவலைக்கிடமான நிலையில் தான் தமிழ் சினிமா உள்ளது என்பதே இதன் மூலம் தெரியவரும் நிதர்சனம் 

விஜயின் கில்லி , ரஜினியின் படையப்பா தற்போது அஜித்தின் மங்காத்தா என அடுத்தடுத்து நட்சத்திரங்களின் பழைய படங்கள் மீண்டும் வெளியிடப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ் திரையரங்குகளில் ரீரிலிஸ் கலாச்சாரம் பெரியளவில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தனுஷின் 3 திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக புதுப்பிக்கப்பட்ட  டிரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது. 

3 ரீரிலீஸ் 

தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக அறியப்படும் அனிருத் இந்த படத்தின் மூலமாகதான் தனது இசைப் பயணத்தை தொடங்கினார். தனுஷ் நாயகனாக நடிக்க ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்தார். சிவகார்த்திகேயன் சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். வை திஸ் கொலவெறி என்கிற பாடல் முழுவதும் வைரலாக 3 படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு பெருகியது. ஆனால் எதிர்பார்த்ததைப் போல படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்பெறவில்லை. ஆனால் ரசிகர்கள் மனதிற்கு மிக நெருக்கமான படமாக 3 எப்போதும் இருந்து வருகிறது . பள்ளி பருவத்து காதல் காட்சிகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி 3 திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. 

கவலைக்கிடமான நிலையில் தமிழ் திரையரங்குகள்

ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் பெரியளவில் வரவேற்பு கொடுத்தாலும் இதற்கு பின்னால் ஒரு கசப்பான உண்மை இருப்பதை நாம் அனைவரும் அறிவோம் . கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 , தக் லைஃப் , கூலி போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த ஆண்டு வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. சூர்யாவின் கருப்பு படம் நிலுவையில் இருந்து வருகிறது. ஒரு சில படங்களை தவிர்த்து சிறிய பட்ஜெட் படங்களுக்கு மக்கள் ஆதரவு தருவதில்லை. இதனால் திரையரங்குகளை நிர்வகிக்க அவற்றின் உரிமையாலர் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். இதனால் திரையரங்குகள் சூப்பர்ஹிட் ஆன படங்களை மறுபடியும் திரையரங்குகளில் வெளியிட தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு தொடக்கம் சுமார் என்றாலும் அடுத்தடுத்து வரும் படங்கள் நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Mahindra SUV: மஹிந்த்ராவை கட்டிக் காப்பாற்றும் எஸ்யுவிக்கள்..! டாப் செல்லிங் மாடல் என்ன? சொதப்பும் கார் என்ன?
மஹிந்த்ராவை கட்டிக் காப்பாற்றும் எஸ்யுவிக்கள்..! டாப் செல்லிங் மாடல் என்ன? சொதப்பும் கார் என்ன?
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Embed widget