சிம்பு படத்திற்கு NOC தர மறுத்த தனுஷ் ? உச்சகட்ட கோபத்தில் வெற்றிமாறன்... எத்தனை கோடி டிமாண்ட் ?
வடசென்னை கதையை மையப்படுத்தி சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு தனுஷ் என்.ஓ.சி வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

வெற்றிமாறன் சிம்பு கூட்டணி
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வரும் படம் வடசென்னை 2. இந்த படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என தனுஷ் வெற்றிமாறன் இரு தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் வடசென்னை கதையுலகோடு தொடர்புடைய ஒரு கதையை வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தானு இந்த படத்தை தயாரிக்கிறார். நெல்சன் ,கவின் , ஆண்டிரியா , சமுத்திரகனி ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று சமீபத்தில் வடசென்னையில் எடுக்கப்பட்டது. முன்னதாக வடசென்னை படத்திலேயே சிம்பு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்து பின் அந்த யோசனை கைவிடப்பட்டது. இந்த முறை சிம்பு வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னையை மையப்படுத்திய கதை என்பதால் தனுஷ் நடிக்க இருந்த 'ராஜன் வகையறா' படத்தை வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்குகிறாரா என்கிற குழப்பமும் ரசிகர்களிடையே இருந்து வருகிறது .
NOC வழங்க மறுத்த தனுஷ்
வடசென்னை திரைப்படம் தனுஷின் வர்டர்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவானது. தற்போது சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படமும் வடசென்னை கதையுலகத்திற்குள் நடப்பதால் இந்த படத்திற்கு தனுஷிடம் வெற்றிமாறன் NOC கேட்டுள்ளார். முதலில் NOC கொடுப்பதாக சொன்ன தனுஷ் படத்தின் ப்ரோமோ வீடியோ எடுத்தபின் NOC வழங்க ரூ 20 கோடி கேட்டுள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. முன்னதாக நயன்தாராவின் ஆவணப்படத்திற்காக நானும் ரவுடிதான் படத்தின் பிடிஎஸ் காட்சிகளை பயண்படுத்த தனுஷ் NOC வழங்க மறுத்தது பெரியளவில் சர்ச்சையானது. தற்போது சிம்பு படத்திற்கு தனுஷ் NOC வழங்க மறுத்துள்ளது சிம்பு ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. சிம்புவின் மீதுள்ள வன்மத்தால் தனுஷ் NOC வழங்க 20 கோடி கேட்டுள்ளதாக அவரை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
#Cinebytes: Reports claim #Dhanush is demanding ₹20 crore from #VCreations to release the NOC for #VadaChennai! 🤯🔥 What's cooking? 🍿 #KollywoodCinima #Dhanush #VadaChennai #Vetrimaaran #SilambarasanTR pic.twitter.com/lz0a5s0uuj
— Raj Esh (@T_RajeshT) June 29, 2025






















