Wunderbar Films Hacked: ‛ஒய் திஸ் கொலவெறி...’ தனுஷின் யூடியூப் சேனல் முடக்கம்... யாரு பண்ண வேலை இது?
தனுஷின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளமான Wunderbar films யூடியூப் தளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளமான Wunderbar films யூடியூப் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Wunderbar films என்பது தனுஷின் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.
தமிழ் சினிமாவில்‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி ‘காதல் கொண்டேன்’ ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ‘வட சென்னை’
உள்ளிட்ட பல படங்களில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் தனுஷ். ஆரம்பத்தில் நடிகராக மட்டும் இருந்தவர் பின்னாளில் பாடகராக, பாடலாசிரியராகவும் மாறினார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் 'ஒய் திஸ் கொலவெறி' என்ற பாடலை எழுதியதோடு அந்தப் பாடலை பாடவும் செய்திருந்தார். இந்த பாடல் உலகம் முழுக்க ஹிட்டானது.
View this post on Instagram
அதனைத்தொடர்ந்து தயாரிப்பாளராகவும் மாறிய தனுஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். இந்தப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் தொடர்ந்து ‘வேலை இல்லா பட்டதாரி’ ‘காக்கி சட்டை, விசாரணை, காலா, மாரி 2 உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இந்தப்படங்களுக்கான டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் மற்றும் படம் தொடர்பான பிரோமோஷன் வேலைகள் என அனைத்தும் ‘Wunderbar films’ யூடியூப் சேனல் தளத்திலேயே வெளியிடப்பட்டது.
View this post on Instagram
இதில் ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் 1 பில்லியன் வியூசை எட்டியிருந்தது. இதனிடையே இயக்குநராகவும் அவதாரம் எடுத்த தனுஷ் ராஜ்கிரண் நடித்த ‘பவர் பாண்டி’படத்தையும் இயக்கினார்.