(Source: ECI/ABP News/ABP Majha)
Dhanush Next Movie:தனுஷ் இயக்கத்தில் 4வது படம் - வித்தியாசமான டைட்டில்! ரசிகர்கள் குஷி
தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள நான்காவது படத்திற்கு "இட்லிக்கடை" என்று பெயரிடப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கும் நான்காவது படம்:
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு முகங்களை கொண்டவர். அந்தவகையில் தன்னுடைய 50 வது படமான ராயன் படத்தை இவரே இயக்கி நடித்தார். இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தனுஷுக்கு இரண்டு செக் வழங்கினார் தயாரிப்பாளர் காலநிதி மாறன். ஒன்று நடிகர் தனுஷுக்கு மற்றொன்று இயக்குனர் தனுஷுக்கு என்றார்.
இட்லிக்கடை:
இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் அடுத்த படம் எது என்ற கேள்வி எழுந்தது. அதாவது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் தான் தற்போது இயக்கி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஸ்பாரோவ் பாடல், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மத்தியில் இப்போதே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
#DD4 Title #IdliKadai
— GLAD_TO_MOVIES (@Gh0stThere37592) September 16, 2024
• Silently Shoot Started At Theni🤯
• #Dhanush As Main Lead & Director🔥
• #AshokSelvan To Play Very Important Role in The Film😎
• #NithyaMenon - #Sathyaraj - #Rajkiran & #ShaliniPandey in Pivotal Roles✨ pic.twitter.com/0gv3U6sVaK
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் இவரது இயக்கத்தில் வெளிவரவுள்ள மூன்றாவது படம். இதையடுத்து இவரது இயக்கத்தில் நான்காவதாக ஒரு படம் உருவாகவுள்ளது. தனுஷ் இயக்கும் நான்காவது படத்தின் பெயர் இன்று (செப்டம்பர் 17) அறிவிக்கப்பட்டுள்ளது.
Official announcement on #Dhanush's Next movie #D52 (#DD4)💥
— AmuthaBharathi (@CinemaWithAB) September 17, 2024
Starring Dhanush in lead role and directed by Himself 🎬
Produced by @DawnPicturesOff !! pic.twitter.com/5l1SaWJArY
அதாவது டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு "இட்லிக்கடை" என்று பெயரிடப்பட்டுள்ளது. அதோடு இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், நடிகர்கள் சத்யராஜ், அசோக் செல்வன்,ராஜ்கிரண் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.