Actress Leena: பிரதமரால் அறிமுகம்.. விண்வெளி வீரரை இரண்டாவதாக திருமணம் செய்த தனுஷ் பட நடிகை!
நடிகர் தனுஷ் படத்தில் நடித்த நடிகை தனது 43வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

நடிகர் தனுஷுடன் அனேகன் திரைப்படத்தில் நடிகை ஒருவர் தன்னுடைய 43வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். விண்வெளி வீரரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகைக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான மறைந்த கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்து வெளியான அனேகன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை லீனா. தமிழில் அனேகன் படம் மட்டும் இல்லாமல் சியான் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’O2' போன்ற படங்களிலும் 70-க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை லீனா கடந்த 2004ஆம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து நடைபெற்றது. 9 ஆண்டுகால திருமண வாழ்வில் ஏற்பட்ட முறிவால் சோர்ந்து போகாமல் தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

விவாகரத்துக்குப் பின்னர் பெற்றோர்களுடன் வசித்துவந்த லீனா தற்போது பிரசாந்த் பாலகிருஷ்ண நாயர் என்பவரை இரண்டாவதாக மறுமணம் செய்துள்ளார். இதுதொடர்பான தகவலை நடிகை லீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
இவர்களுக்கு இடையிலான மறுமணம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்று இருந்தாலும், இதனை தற்போதுதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை லீனா. நடிகை லீனா மற்றும் அவரது கணவர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவருக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
நடிகை லீனா திருமணம் செய்து கொண்டுள்ள பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் விண்வெளி ஆராய்ச்சி வீரராவார். பிரதமர் மோடி நேற்று அதாவது பிப்ரவரி 27ஆம் தேதி கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ள செல்லவுள்ள நான்கு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். அந்த நான்கு வீரர்களில் பாலகிருஷ்ணன் நாயரும் ஒருவர் ஆவார்.
நடிகை லீனா தனது கணவர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார். இவர்களுக்கு ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.





















