Yatra Dhanush: தன் இயக்கத்தில் மகனை அறிமுகம் செய்யும் தனுஷ்? லீக்கான ராயன் ஸ்பெஷல் அப்டேட்!
தனுஷின் மூத்த மகனான யாத்ரா திரையில் அறிமுகமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா அறிமுகமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராயன்
தனுஷின் 50ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். முன்னதாக அவர் இயக்கிய பவர் பாண்டி படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில், தற்போது ராயன் படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது இதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் தகவல்கள் வரிசையாக வெளியாகின.
#D50 is #Raayan 🔥
— A.R.Rahman (@arrahman) February 19, 2024
🎬 Written & Directed by @dhanushkraja @omdop @editor_prasanna @kalidas700 @sundeepkishan @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss @sunpictures @sundeepkishan #kalidasjayaram @omdop #editorprasannagk @peterheinoffl… pic.twitter.com/XjeojhSYXh
எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்னா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருப்பதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ராயன் படத்தின் மற்றொரு முக்கியமான அப்டேட் ஒன்றை தனுஷ் இன்னும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறாராம்.
திரையில் அறிமுகமாகும் தனுஷ் மகன் யாத்ரா
தனுஷின் மூத்த மகனான யாத்ரா ராயன் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாக இருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக திரைப்பட ஆடியோ லாஞ்ச், சக்சஸ் மீட், திரையிடல் என எல்லா இடங்களிலும் காணப்படுகிறார் தனுஷின் மகன் யாத்ரா
தந்தை தனுஷ் மற்றும் தாத்தா ரஜினி என இருவரின் முகவெட்டையும் கொண்டிருப்பதால் அதிகப்படியான ஊடக கவனம் அவர் மீது குவிந்துள்ளது. விரைவில் அவர் திரையில் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ராயன் படத்தில் அவர் நடித்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. குறிப்பாக யாத்ரா களமிறங்க இதைவிட ஒரு சிறந்த தருணம் அமைய வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
“நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்”
தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்திற்கு ”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். ஒரு சராசரி காதல் கதை என தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் இப்படத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

