Deepika Padukone | தங்கைக்கு நிச்சயிக்கப்பட்டவருடன் காதல், காமம்.. ரோலை பற்றி மனம்திறந்த தீபிகா..
மக்கள் எளிதில் கணிக்கக்கூடிய மற்றும் க்ளீஷேக்கள் கொண்ட சினிமாக்களை தவிர்ப்பதாக நான் உணர்கிறேன். அவர்கள் தொடர்ந்து புதிய கதைக்களம், வித்தியாசமான சினிமாவைத் தேடுகிறார்கள்.
அமேசான் ப்ரைம் ஒடிடியில் கெஹ்ரையான் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் நடிகர்கள் அனைவரும் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரிகின்றனர். அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி மற்றும் தைரிய கர்வா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள தீபிகா படுகோனே, தான் கதையில் ஒரு முக்கிய பாத்திரமாக இருக்கும் முதல் படம் இது என்று மீண்டும் மீண்டும் எல்லா இடங்களிலும் கூறி வருகிறார்.
View this post on Instagram
அவர் இதற்கு முன்பு காதல் கதைகளின் ஒரு பகுதியாக இருந்தாலும், கெஹ்ரையான் வேறு ஒரு தளத்தில் இருப்பதாக தீபிகா எதிர்பார்ப்பை தூண்டுகிறார். ரசிகர்கள் உங்களை அப்படி பார்ப்பதற்கு தயாராக இருக்கிறாராகளா, திரைப்படத் தயாரிப்பாளர்கள் உறவுகளின் யதார்த்தமான சித்தரிப்பைக் காட்டும் கதைகளை தயாரிக்க தயாராக இருக்கிறாராகளா என்று கேட்டபோது, தீபிகா, "பார்வையாளர்களே எங்களுக்கு இந்த விதமான திரைப்படங்கள் வேண்டும் என்ற குறிப்புகளை தருகிறார்கள், நல்ல சினிமாவை கொடுத்தால் பார்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் நம்மிடம் கூறுவதாக நான் நினைக்கிறேன். நான் பார்வையாளர்களிடமிருந்துதான் அடுத்து என்ன செய்யலாம் என்ற குறிப்புகளை எடுத்துக்கொள்கிறேன், மக்கள் எளிதில் கணிக்கக்கூடிய மற்றும் க்ளீஷேக்கள் கொண்ட சினிமாக்களை தவிர்ப்பதாக நான் உணர்கிறேன். அவர்கள் தொடர்ந்து புதிய கதைக்களம், வித்தியாசமான சினிமாவைத் தேடுகிறார்கள் என்று எல்லோருக்குமே தெரிகிறது. இன்று நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எல்லோருக்கும் அது தெரியும். அவர்கள் தங்கள் யோசனைகளை முன்னோக்கிச் செல்வதற்கான நம்பிக்கையை பார்வையாளர்களிடம் இருந்துதான் பெறுகிறார்கள். அந்த முடிவுகள் மற்றும் தேர்வுகளை எடுப்பதில் தைரியமாக செயல்படுகிறார்கள்."
View this post on Instagram
ஷகுன் பத்ராவின் இயக்கத்தில், படத்தில் யதார்த்தமான அணுகுமுறையுடன் எடுக்கப்பட்டுள்ளது. மெச்சூர்டான சினிமாவுக்கு கெஹ்ரையன் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று தீபிகா எதிர்பார்க்கிறாரா? என்று கேட்டபோது, "மக்கள் தாங்கள் என்ன விரும்புகிறோம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்று நம்புகிறேன். முதலில், அவர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்கள், இரண்டாவதாக, இந்தக் கதைகளைச் சொல்ல நம்மிடம் எண்ணற்ற தளங்கள் உள்ளன. மக்களும் தங்கள் மனதில் இருக்கும் கதைகளை அச்சமின்றி சொல்வார்கள் என்று நம்புகிறேன்” என்று தீபிகா கூறினார்.